Published : 11 Jul 2018 12:01 PM
Last Updated : 11 Jul 2018 12:01 PM
முத்தலாக்கில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கணவனால் தொடர்ந்து அடிவாங்கியதோடு அறையில் பூட்டப்பட்ட நிலையில் உணவின்றி வாடியதாகக் கூறப்படுகிறது. அப்பெண் நேற்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்தார்.
ரஸியாவின் சகோதரி இதுகுறித்து தெரிவிக்கையில், உயிரிழந்த என் சகோதரிக்கு ஆறு வயதில் ஒரு குழந்தையுண்டு. ஒரு தொலைபேசி அழைப்பின்மூலம் அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார். அது மட்டுமின்றி வரதட்சனை கேட்டு உணவு கொடுக்காமல் எனது சகோதரியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டார்.
ஒரு மாதம் பூட்டப்பட்ட அறைக்குள் உணவு கொடுக்காமல் அவர் தனது உறவினர் வீட்டுக்குப் போய்விட்டார். எனக்கு தகவல் கிடைத்தவுடன் சகோதரி இருந்த வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு பின்னர் போலீஸுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் போலீஸார் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை'' என்றார்.
மேரா ஹக் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பார்ஹத் நக்வி, ஏஎன்ஐயிடம் இதுகுறித்து தெரிவிக்கையில், ‘‘ரஸியாவின் கணவர் நஹீம் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இதைப்போன்ற கொடுமையை தனது முதல்மனைவிக்கும் செய்துள்ளார்.
ரஸியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பலனின்றி பின்னர் லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் அவர் குணமாகாத நிலையில் திரும்பவும் ஊருக்கே கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்’’ என பார்ஹத் நக்வி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT