Published : 18 Jul 2018 08:00 AM
Last Updated : 18 Jul 2018 08:00 AM
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “மஹா சம்ப்ரோக் ஷணத்திற்கு பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மற்றும் அதிகாரிகள் கூறியது கண்டிக்கத்தக்கது. ரமண தீட்சிதர் கூறியபடி, கோயிலில் பத்திரமாக புதைத்து வைக் கப்பட்டுள்ள அரசர் காலத்து நகைகளை அபகரிக்கவே இவ்வாறு கூறினார்களோ என்ற சந்தேகமும் பலமடைந்தது. பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என யார் முடிவெடுத்தார்களோ அவர்கள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவஸ்தானத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும். இனியும் இது போன்று பக்தர்களை அவமதிப்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுத்த வேண்டும்” என்றார்.திருப்பதி கோயிலில் சம்ப்ரோக் ஷண விழாவின்போது
நேற்று காலை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, அறங்காவலர் குழு தலை வர் புட்டா சுதாகர் யாதவ், மற்றும் ஆகம வல்லுநர்கள் ஆகியோ ருடன் காணொளி மூலம் கலந்தாலோசனை நடத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில், ‘‘இதுவரை திருப்பதி ஏழுமலயான் கோயிலில் நடந்த அஷ்டபந்தன மஹா சம்ப்ரோ க் ஷணத்தின் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், கோயிலுக்குள் ஆகம விதிகளின்படி ஹோமங்கள், பூஜைகளும் நடைபெற்றது. அது போல் இம்முறையும், ஆகம விதிகளுக்கு தடங்கல் வராமல், சுவாமியை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்ச பக்தர்களையாவது அனுமதித்து அவர்களுக்கு தரிசன ஏற்பாடு செய்யுங்கள்’’ என உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் செய்தி யாளர்களிடம் நேற்று காலை கூறியதாவது: முதல்வரின் உத்தர வின்பேரில், பக்தர்களை மஹா சம்ப்ரோஷணத்தின் போது அனு மதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் இந்த 6 நாட்களுக்கு தினமும் சரா சரியாக சுமார் 15 ஆயிரம் பக்தர் களை மட்டுமே அனுமதிக்க இயலும். மேலும், இது குறித்து வரும் 23-ம் தேதி வரை பக்தர் களிடையே கருத்துக்களைக் கேட்டறிந்து, வரும் 24-ம் தேதி நடை பெறும் அறங்காவலர் குழு கூட்டத் தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அணில் குமார் சிங்கால் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT