Last Updated : 04 Jul, 2018 08:27 AM

 

Published : 04 Jul 2018 08:27 AM
Last Updated : 04 Jul 2018 08:27 AM

முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் சசி தரூர் மனு

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே மாதம் டெல்லி போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சசி தரூர் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சிறப்பு நீதிபதி அர்விந்த் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு டெல்லி போலீஸார் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x