Last Updated : 28 Jul, 2018 11:10 AM

 

Published : 28 Jul 2018 11:10 AM
Last Updated : 28 Jul 2018 11:10 AM

மரத்தடியில் பாடம்: வகுப்பறை இல்லாதததால் சத்தீஸ்கரில் 10 ஆண்டுகளாக தொடரும் அவலம்

பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்படாத நிலையில் வகுப்பறைகள் இன்றி 10 ஆண்டுகளாக மரத்தடியிலேயே பாடம் படித்துக்கொண்டிருக்கும் அவலம் சட்டீஸ்கர் கிராமம் ஒன்றில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு அக்கிராமத்தில் ஒரு மோதல் சம்பவமே முதல் காரணம் என்று சொல்லப்படுகிறது.

படிப்பு முக்கியமா வழக்கு முக்கியமா என்று கேட்டால் சிலர் வழக்கு என்று சொல்லக்கூடும். நம்புங்கள் சத்தீஸ்கரின் ஒரு கிராமத்தில்தான் ஒரு வழக்கைப் பிடித்துக்கொண்டு இன்னமும் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் படிப்பைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாக இல்லை.

பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜகிமா கிராமம். இங்கு பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் சில கிராமவாசிகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்த நிலைமைக்கு வழிவகுத்தது.

மழை பெய்யும்போது மற்றும் பருவகாலங்களில், பள்ளிக்கூடம் விடுமுறை தினத்தை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது அல்லது அருகிலுள்ள அங்கன்வாடியில் வகுப்புகள் நடத்தவேண்டியுள்ளது.

2005-ல் ஆரம்பப் பள்ளிக்கூடத்திற்கான கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர். ஆனால் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வு காணப்படவில்லை என்பதால் பத்தாண்டுகளுக்கும் மேலாக இன்னும் கட்டிடம் கட்டப்படாமலேயே இருக்கிறது.

இது தொடர்பாக பல்ராம்பூர் மாவட்ட கல்வி அதிகாரி, ஐபி குப்தா கூறுகையில், ''இப்பள்ளியில் கட்டிடம் கட்டும் பொறுப்பு பள்ளி நிர்வாக கமிட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிலத்துக்குச் சொந்தக்காரருக்கும் பள்ளி நிர்வாகக் கமிட்டிக்குமிடையே மோதல் வெடித்தது. இதில் நிலத்துச் சொந்தக்காரர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால்தான் கிராமவாசிகள் கோபமாக உள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x