Published : 02 Jul 2018 08:14 AM
Last Updated : 02 Jul 2018 08:14 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று 5 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “ரெயின்படா கிராமத்தில் ஒரு கும்பல் அரசுப் பேருந்திலிருந்து இறங்கி உள்ளது. அவர்களில் ஒருவர் ஒரு பெண் குழந்தையுடன் பேச முயன்றுள்ளார். இதையடுத்து, குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை கிராம மக்கள் தாக்கி உள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் 15 பேரை கைது செய்தனர்” என்றார்.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT