Published : 12 Jul 2018 08:14 PM
Last Updated : 12 Jul 2018 08:14 PM
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் இன்று மாலை தனியார் இரும்புத் தொழிற்சாலையில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனந்தபூர் மாவட்டம், தாடிபத்ரி பகுதியில் தனியார் இரும்புத் தொழிற்சாலை உள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்தத் தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ‘ஷிப்ட்’ முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் திடீரென இங்கு காஸ் கசிவு ஏற்பட்டது. இதனை அறிந்து தொழிலாளர்கள் பலர் தப்பிக்க தொழிற்சாலையை விட்டு வெளியே ஓடினர்.
ஆனால், இதில், 8 தொழிலாளர்கள் மட்டும் தொழிற்சாலைக்குள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் மூச்சு திணறி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் உயிருக்குப் போராடினர். உடனடியாக இவர்களை தாடிபத்ரி அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தாடிபத்ரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT