Published : 03 Jul 2018 07:41 AM
Last Updated : 03 Jul 2018 07:41 AM
தெற்கு காஷ்மீர், இமயமலை யில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 5-வது பக்தர்கள் குழு நேற்று புறப்பட்டது.
60 நாள் நடைபெறும் வருடாந்திர அமர்நாத் யாத்திரை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. அனந்தநாக் மாவட்டம், பஹல்காம் அடிவார முகாமிலிருந்து 36 கி.மீ. தூர பாரம்பரிய வழியிலும் கந்தர்பால் மாவட்டம் பல்டல் அடிவார முகாமிலிருந்து 12 கி.மீ. குறைந்த தூர வழியிலிலும் பக்தர்கள் அமர்நாத் செல்கின்றனர். இந்த இரு வழியிலும் நேற்று முன்தினம் மாலை வரை 13,816 பக்தர்கள் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் 4,047 பக்தர்கள் கொண்ட 5-வது குழு ஜம்முவிலிருந்து நேற்று அதிகாலை புறப்பட்டது. 134 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் இவர்கள் புறப்பட்டனர். இவர்களில் 148 சாதுக்கள், 370 பெண்கள் உள்ளிட்ட 2,303 பேர் பஹல்காம் வழியிலும் 1,744 பேர் பல்டல் வழியிலும் அமர்நாத் செல்கின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மழை பெய்தாலும் அமர்நாத் யாத்திரை திட்டமிட்டவாறு கடந்த 28-ம் தேதி தொடங்கியது. என்றாலும் தொடர் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பயணத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT