Published : 27 Jul 2018 04:11 PM
Last Updated : 27 Jul 2018 04:11 PM
ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக் கட்ட விசாரணையில், இச்சம்பவத்தின்போது ஜபோவால் கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த கூலியாட்கள் வயலில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பழைய வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், ''நாங்கள் இன்று காலை வயலில் நடவு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். தண்ணீர் குடிப்பதற்காக சிறிது நேரம் உட்கார்ந்திருந்தபோதுதான் திடீரென அருகில் எங்கோ திடீரென குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது'' என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதத் தொடக்கத்தில், சர்வதேச எல்லை யோரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் செலுத்திய கனரக குண்டு ஒன்று ஆர்னியா மற்றும் ராம்கர் செக்டர் பகுதிகளில் விழுந்து போலீஸ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர்.
இந்நிலையில் இன்று நிகழ்ந்துள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT