Last Updated : 20 Jul, 2018 12:17 PM

 

Published : 20 Jul 2018 12:17 PM
Last Updated : 20 Jul 2018 12:17 PM

அன்று குப்பைக் காகிதம் பொறுக்குபவரின் மகன்; இன்று எம்பிபிஎஸ் மாணவர் - வறுமையிலும் சாதனை

அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்த வறுமை நிலையிலிருந்து இன்னமும் மீள முடியாத நிலையில் உள்ள ஒரு மாணவருக்கு ஜோத்பூர் மருத்துவக் கல்லூரியில்  சீட் கிடைத்துள்ளது

அன்று குப்பைக் காகிதங்கள் பொறுக்குவரின் மகன் என்று அழைக்கப்பட்டவர் இன்று மருத்துவக் கல்லூரி மாணவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அஷ்ராம் சவுத்திரி.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ''நான் என் பெற்றோர்கள் மற்றும் நான் படித்த நவோதயா வித்யாலயா, என் படிப்பு நிதிஉதவி வழங்கிய தக்ஷணா பவுண்டேஷன் ஆகியோருக்கு நன்றி சொல்லவேண்டும், நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் கிராமத்தில் இருந்த ஒரு டாக்டர் மக்களுக்கு சேவை செய்வதை நான் பார்த்தேன். ஏழை மக்கள் மீது அவர் காட்டிய அன்பை என்னால் மறக்க முடியாது. நான் மருத்துவராக வேண்டும் என்று எண்ணத்தை ஏற்படுத்தியவர் அவர்தான்’’ என்றார்.

தன் மகன் டாக்டராகிவிட்டதை பெருமையோடு பகிர்ந்துகொள்ளும் ஆஷ்ரம் கூறுகையில், ''என் மகன் 12ஆம் வகுப்பு முடித்தபிறகு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவுக்கு எங்களிடம் போதுமான பணவசதி இல்லை. மற்றவர்களிடமும் எதிர்பார்த்தோம். கூடுதல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சிலர் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்கள். வருங்காலத்தில் நிச்சயம் அவன் ஒரு சிறந்த மருத்துவராக வருவார்'' என்றார்.

அஷ்ராமின் பக்கத்துவீட்டுக்காரர், ''வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையிலும் குடும்பத்தின் வறுமை நிலையிலும் சிரமப்பட்டு படித்தார். தந்தையின் மோசமான நிதிநிலையிலும் முயற்சியைக் கைவிடவில்லை. அவர் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது'' என மாணவரின் ஆர்வத்தைப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x