Published : 02 Jul 2018 05:52 PM
Last Updated : 02 Jul 2018 05:52 PM
பயிரை விற்றும் தொடர்ந்து பணம் பெற முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் கடன் தொல்லையிலிருந்து மீளமுடியாமல் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக இறந்த பிரிஜ்மோகன் படேலின் (40) உறவினர் கூறுகையில், ''ஓஷங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிபாரியா கிராமத்தில் வசித்து வந்த 40 வயது மதிக்ககத்தக்க விவசாயி கடந்த ஆண்டு தன்னுடைய பயிரை விற்றும் அதற்கான பணம் இன்னமும் பெறமுடியாத நிலையே அவருக்கு இருந்து வந்தது.
இந்நிலையில் விவசாயத்துக்காக அவர் ஏற்கெனவே வாங்கியிருந்து ரூ.4 லட்சத்தை உடனடியாகக் கட்டியாக வேண்டிய சூழல் அவரது கழுத்தை இறுக்கியதால் அவர் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பிபாரியா காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் பிரவீண் குமார் கூறுகையில், ’’பிரிஜ்மோகன் என்பவர் நகரைஅடுத்த கதகாட் என்ற பகுதியில் வசித்து வந்தார். இப்பகுதி ஓஷங்காபாத்திலிருந்து 80 கி.மீ.தொலைவில் உள்ளது.
பிரிஜ்மோகன் இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் விஷயத்தை அருந்தியுள்ளார். இச்சம்பவம் விவரம் தெரிந்த பிறகே அருகிலுள்ள அவரது உறவினர்கள் ஓடிவந்தனர்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சைப் பலனின்னிற் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள வழக்குப் பதிவு செய்யப்பட்டது’’ என்றார்.
இதற்கிடையில், உயிரிழந்தவரின் சகோதரர் மதன்லால் படேல் கூறுகையில், ’’பிரிஜ்மோகன் கிஸான் கிரெடிட் கார்டு திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சம் வாங்கியிருந்தார். கடனை செலுத்துவதற்காக பாசிப் பயிர் விற்ற பணம் கைக்குவரும் என்று நிறைய எதிர்பார்ப்புகளோடு இருந்தார். ஆனால் இந்த நிமிடம் வரை அந்தப் பணம் வந்துசேரவில்லை. அதற்குள் அதிகாரிகள் கடன் பணத்தை செலுத்தவேண்டும் என அவரை நெருக்கினர்.
இதனால் என்னசெய்வதென்று தெரியாதநிலையில் அவர் தற்கொலைக்கு சென்றுவிட்டார். கடனால்தான் இந்த தற்கொலை என்று உறுதியாகச் சொல்ல முடியும். வேண்டுமானால் விசாரித்துப் பாருங்கள்... வேறெதுவும் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT