Last Updated : 31 Jul, 2018 01:17 PM

 

Published : 31 Jul 2018 01:17 PM
Last Updated : 31 Jul 2018 01:17 PM

‘சிவபெருமானாக’ லாலுவின் மகன்: மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்ததாக பேட்டி

ராஷ்டிரிய ஜனதா தள மாநிலத் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் இன்று பாட்னாவில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானைப் போல ஆடைகள் அணிந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். முன்னதாக தியோகரில் பாபா பைத்யநாத் தம் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஏஎன்ஐக்கு அவர் அளித்த பேட்டி:

''பீகாரின் மக்கள் நன்றாக இருக்கவேண்டும் எனவும், தேச முழுவதும் ஒவ்வொருவரும் எந்தவொரு பிரிவினையோ அல்லது தடையையோ இல்லாமல், இணக்கமாக. அமைதியாக வாழவும் நான் பிரார்த்தனை செய்தேன்.

அதுமட்டுமின்றி என் தந்தையின் உடல்நலத்திற்காகவும் அவர் நீண்டகாலம் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்'' என்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மருத்துவமனை மற்றும் மும்பை மருத்துவமனை ஆகியவற்றின் பரிந்துரையின்பேரில் கடந்த மார்ச் 29லிருந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்று வந்தார். மும்பையில் இதய சிகிச்சை பெற்று ஜூலை 8 அன்று பாட்னா திரும்பினார்.

கடந்த ஆண்டு, தேஜ் பிரதாப் இதேபோல இந்துக் கடவுள் கிருஷ்ணரைப் போல வேடம் தரித்தார். சிவப்புத் தலைப்பாகை அணிந்துகொண்டு புல்லாங்குழல் கையில் வைத்துக்கொண்டு விளையாடிய வண்ணம் ஆங்கில புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x