Published : 23 Jul 2018 11:28 AM
Last Updated : 23 Jul 2018 11:28 AM
ஆந்திர மாநிலத்தில்,விசாகப்பட்டிணத்தில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ளது தாமோதரம் சஞ்சீவையா தேசிய சட்டப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 80 மாணவர்கள் தற்போது வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கு மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேர்வுகளில் சில தாள்களில் தேர்ச்சியடையாத மாணவர்கள் அவர்களது கல்லூரியில் பயில்வதற்கான கால அளவு நிறைவடைந்த நிலையில், விடுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று இவர்கள் பல்கலை வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செமஸ்டரில் தவறவிட்ட தாள்களை எழுதி தேர்ச்சியடைய மீண்டும் நான்கு முறை அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது, எனினும், அதிகாரிகள் நான்காவது முயற்சிக்கு அனுமதி வழங்காமல், வளாகத்தை விட்டு வெளியேறும்படி மாணவர்களைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 80 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ப்ரதீக் என்ற மாணவி ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில்,‘‘புதிய விதிமுறைகளின்படி செமஸ்டரில் விடுபட்ட தாள்களில் தேர்வு எழுத இனி மூன்று முறை மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் இரண்டு நாள் முன்னதாக சொல்வது மாணவர்களை பழிவாங்கும் செயல். இதுகுறித்து நாங்கள் பல்கலைக் கழகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தபோதிலும், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலையில் எங்களை இரக்கமின்றி வெளியேற்றிவிட்டனர்.
இப்பிரச்சனையில் இப்போது எங்களுக்கு தேவை நீதி, மாணவர்களுக்கு நன்றாக கற்பிக்க வேண்டும் என்ற உணர்வு இங்குள்ள ஆசிரியர்களிடத்தில் இல்லை. மாணவர்களை சமமாக அவர்கள் நடத்துவதும் இல்லை.
இதுதொடர்பான புகார்களை நிர்வாகத்துக்குத் தெரிவித்தும் அவர்கள் இதற்கு முக்கியத்துவம் தரவில்லை. மேலும் இங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடம் தனிப்பட்ட வெறுப்புணர்ச்சிகளை வைத்திருக்கிறார்கள். அதனாலேயே பழிவாங்கும் உணர்ச்சியோடு, கல்லூரியின் கல்வி ஆண்டுகள் முடிவதற்குள் விடுபட்ட தாள்களை பெயிலாக்கி விட்டார்கள்.
அதேபோல எங்களுக்கு பரீட்சை விதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்த விதிகள் பற்றி எந்தத் தகவலும் எங்களுக்கு சொல்லப்படவில்லை. மாணவர்களிடம் எந்தவித நட்புணர்வும் அவர்களுக்கு இல்லை. 80 மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் தவறு யாரிடம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்’’ என போராட்டத்தில் பங்கேற்ற மாணவி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT