Last Updated : 20 Jul, 2018 05:29 PM

 

Published : 20 Jul 2018 05:29 PM
Last Updated : 20 Jul 2018 05:29 PM

இஸ்லாமாபாத் அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவை வீட்டுக்கு திருப்பி அனுப்புவார்கள்

'சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இஸ்லாமாபாத் அதிகாரிகள் ஜாதவை அவரது வீட்டுக்குத் திருப்பி அனுப்பி வைப்பார்கள்'' என்று பாகிஸ்தான் அரசால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படை அதிகாரியின் நண்பர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் மீதான தீர்ப்பு வர வேண்டிய சூழல் உள்ள நிலையில், பாகிஸ்தான் மக்களிடையே அவரைப் பற்றி மோசமான பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுத் தேர்தல் வருவதை முன்னிட்டு அந்நாடு அவ்வாறு செய்துவருகிறது என ஜாதவின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது பாக்.சிறையில் இருப்பவர். இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ்.

ஜாதவ் வழக்கின் விவரம் நன்கு அறிந்த அவரது நெருங்கிய நண்பர்கள் வழக்கின் தற்போதை நிலை குறித்து பல்வேறு கருத்துகளை ஏஎன்ஐயிடம் பகிர்ந்துகொண்டனர்.

இதுகுறித்து ஜாதவ் நண்பரான அர்விந்த் சிங் என்பவர் ஏஎன்ஐக்கு தெரிவிக்கையில், ''இந்த தண்டனையை வழங்குவதன் மூலம் பாகிஸ்தான் அரசின் பொதுத்தேர்தலை எதிர்கொள்வதை முன்னிட்டு மக்களைக் கவர்வதற்கான ஒரு தந்திரமாகவே பார்க்க முடிகிறது. இவர்மீது இஸ்லாமாபாத் சர்வதேச நீதிமன்றத்தில் வைத்துள்ள வாதங்கள் மிகவும் வலுவாக உள்ளன. அடுத்த விசாரணையின்போது, சர்வதேச நீதிமன்றத்தின் அனைத்து அம்சங்களையும் இந்தியப் பிரதிநிதி நேரடியாக வெளியிடுவார்'' என்றார்.

கிட்டத்தட்ட சிங்கின் கருத்தை ஜாதவின் இன்னொரு நண்பர் துளசிதாஸ் பவார் கூறினார். மற்றபடி, ஐசிஜியில் இந்திய பிரதிநிதி ஒரு பாராட்டத்தக்க வேலை செய்கிறார். சர்வதேச நீதிமன்றம் இந்தியாவுக்கு ஆதரவாகவே தீர்ப்பளிக்கும் என்றார் அவர்.

மேலும் துளசிதாஸ் பவார் கூறுகையில், ''நமது வழக்கறிஞர் சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, ''ஜாதவ் சிறைச்சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளார்'' என உறுதியான வாதங்களை முன்வைத்தார். நீதித்துறையின்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தீர்ப்பு நிச்சயமாக இந்தியாவுக்கு ஆதரவாக அமையும். இஸ்லாமாபாத் அதிகாரிகள் ஜாதவ்வை அவரது வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைப்பார்கள்'' என்றார்.

இந்தியாவுக்கு உளவு பார்த்ததாக ஜாதவ் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பாகிஸ்தான் மீது கோபத்தை வெளிப்படுத்திய வந்தனா பவார், ஜாதவ்வின் இன்னொரு நண்பர்.  அவர் கூறுகையில், "இந்த வழக்கில் இஸ்லாமாபாத் மிகவும் மோசமாகப் பொய் கூறுகிறது, அவர்களுக்கு ஒரு பொருத்தமான பதிலடியை சர்வதேச நீதிமன்றம் மட்டுமே கொடுக்கமுடியும்'' என்றார்.

முன்னதாக, இந்திய உளவுத்துறையான (ரா) உளவு மற்றும் ஆய்வுத்துறைக்காக வேவு பார்த்ததாகவும் தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறி பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ஜாதவ் கைது செய்யப்பட்டார்.

ஆயினும், இந்திய கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜாதவ் ஈரானிலிருந்து கடத்தப்பட்டவர். அவர் அங்கு சொந்தமாகத் தொழில் செய்யும் ஆர்வத்தில் இருந்தார்.

ஏப்ரல் 10, 2017-ல் பாகிஸ்தானில் ஒரு பொது நீதிமன்றத்தின்மூலம் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்து, மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசை அணுகிய பின்னர் சர்வதேச நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. தற்போது இவ்வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x