Last Updated : 11 Jul, 2018 04:19 PM

 

Published : 11 Jul 2018 04:19 PM
Last Updated : 11 Jul 2018 04:19 PM

சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் 3 பேருடன் செல்ஃபி: இளைஞரின் பீடிப்பு நோய்?

உலகமெங்கும் இந்த சுயமோக, சுயலயிப்பு செல்ஃபி மோகிகள் பெருத்து வருகின்றனர், இது பல வேளைகளில் துயரத்தில் முடிந்தாலும் இதனால் அவர்கள் மாறுவதில்லை.

சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி மூன்று பேர் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் போது அருகில் போல் அந்த உடல்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது பீடிப்பு நோயையும் தாண்டிய வக்கரமாக கண்டிக்கப்பட்டு வருகிறது.

முதலில் சாலை விபத்தில் சிக்கி பரிதவிப்போருக்கு உதவ வேண்டும், அப்படியில்லை எனில் அத்துயரத்தைக் கண்டு அஞ்சி, ஒதுங்கிச் செல்ல வேண்டும், இந்த இரண்டு பழக்கங்களையும் நாம் பார்த்திருக்கலாம், ஆனால் காப்பாற்றவும் உதவி செய்யாமல் அதைப்பார்த்து அஞ்சி ஒதுங்கவும் இல்லாமல் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மனநிலை என்னவென்பது பற்றி சமூக ஆர்வலர்களுக்கு கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

சாலை விபத்தில் சிக்கிய மூன்று பேரும் கடும் காயத்திற்கு அங்கேயே பலியாகியுள்ளனர். பலரும் இதனைப் படம்பிடித்த அவலத்தோடு, இவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது.

படம் பிடிக்கும் நேரத்தில் உரிய தகவலை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பியிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று போலீசார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சமூகவியலாளர்கள் கூறும்போது, ‘இது பீடிப்பு மனநோய் என்றும் சுயமோக, சுயலயிப்பையும் தாண்டிய ஒரு விதமான வக்கிரம்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x