Published : 09 Jul 2018 02:01 PM
Last Updated : 09 Jul 2018 02:01 PM
இந்தியா முழுவதும் ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்கக் கோருவது நாட்டை பிளவுபடுத்துவதற்கே வழிவகுக்கும், அவ்வாறு கோருபவர்களை தேசப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஷரியத் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனை கடுமையாக விமர்சித்த சுப்பிரமணிய சுவாமி இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:
''தற்போது 'ஒரே நீதிமன்றம் ஒரு சட்டம்' என்ற நிலை மட்டுமே உள்ளன. இதை அரசியலமைப்பு சட்டமே வழிநடத்தும் சக்தியாக விளங்குகிறது. அதற்கு வெளியில் உள்ள எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்தவொரு முயற்சியும் (ஷரியத் நீதிமன்றங்கள் அமைப்பதற்கு) அரசாங்கத்தால் மட்டுமே வலுவாக இயக்கப்பட வேண்டும். தனியே ஷரியத் நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டுமென முயற்சிப்பவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். இக்கோரிக்கையால் பிரிவினைவாம் தூண்டப்படும். நாட்டை பிளவுபடுத்தவே இது வழிவகுக்கும்'' என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
கர்நாடக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கருத்து
இதற்கிடையில் கர்நாடக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸா கான் கூறுகையில், ''இது நல்ல கோரிக்கை, இது எங்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவும். இந்தியாவில் ஒரே ஒரு சட்டம் மட்டுமே உள்ளது என்பதை மறுக்கவில்லை. ஆனால் ஷரியத் நீதிமன்றங்கள் அமைந்தால் இது முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்'' என்றார்.
இஸ்லாமிய சட்டத்திற்குள் உள்ள எல்லா பிரச்சனைகளையும், மற்ற நீதிமன்றங்களை அணுகுவதற்குப் பதிலாக ஷரியத் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் தனிநபர் வாரியம் எழுப்பியுள்ள கோரிக்கையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT