Published : 02 Jul 2018 12:58 PM
Last Updated : 02 Jul 2018 12:58 PM
பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான அங்கிட் திவாரியின் தந்தையை முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி அடித்துவிட்டதாக பாங்கூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கிட்டின தந்தை ராஜ்குமார் திவாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பை மால் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். அங்கு வந்திருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
விடாமல் நீண்டநேரம் தாக்கிய காம்ளியின் மனைவி ஆந்த்ரே ஹெவீட், 59 வயதான அந்த முதியவரிடம் இரக்கமின்றி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.எனினும் காம்ப்ளியும் அவரது மனைவியும் இதுகுறித்து கூறுகையில், ஆர் கே. திவாரிதான் வேண்டுமென்றே ஆந்த்ரேவுக்கு எதிராக கையை நீட்டினார்.
மேலும் வினோத் காம்பிளியின் பாதுகாவலர்கள் அன்கித் திவாரியின் தந்தையையும், அவரது சகோதரரையும் தாக்கியதாகவும் காம்ளியின் மனைவி ராஜ் குமார் திவாரியை (அங்கித்தின் தந்தை) தனது காலணியால் அடித்ததாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்படும் என்று அங்கித் திவாரி கூறியிருக்கிறார்.
பாங்கூர் நகர காவல்துறை இதுகுறித்து தற்போது விசாரித்து வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். இவ்வழக்கில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT