14 ஆண்​டு​களுக்​குப் பிறகு அலி​கர் செல்​லும் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத்

14 ஆண்​டு​களுக்​குப் பிறகு அலி​கர் செல்​லும் ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத்

Published on

அலி​கர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 14-ஆண்டுகளுக்குப் பிறகு அலிகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அலிகாருக்கு மேற்கொள்ளும் ஐந்து நாள் சுற்றுப் பயணம் நேற்று தொடங்கியது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று அவர் அந்த நகரத்தில் வந்திறங்கினார். பாகவத்தின் வருகையை அடுத்து அந்த நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில் அமைப்பை அடிமட்டத்திலிருந்து வலுப்படுத்துவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் அவர்கள் ஆழமாக கலந்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் பாகவத்தை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in