Published : 15 Apr 2025 06:29 PM
Last Updated : 15 Apr 2025 06:29 PM
புதுடெல்லி: இந்தப் பருவமழை காலத்தில், நாட்டில் வழக்கத்தை விட கூடுதலான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்தப் பருவம் முழுவதும் எல் நினோ பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் இந்த ஆண்டு நான்கு மாத (ஜூன் முதல் செப்டம்பர்) பருவ மழை காலத்தில் இயல்பை விட கூடுதல் மழைப் பெய்யக் கூடும். நீண்டகால சராசரி மழை அளவான 87 சென்டி மீட்டரை விட, இந்த ஆண்டு 105 செ.மீ. பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்தியத் துணைக் கண்டத்தில் இயல்பை விட குறைவான மழைப்பொழிவைக் கொண்டு வரும் எல்நினோ ஏற்பட வாய்ப்புகள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகள் ஏற்கெனவே கடுமையான வெப்ப நிலையை எதிர்கொண்டு வருகின்றன. மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் கணிசமாக அளவில் அதிக வெப்ப அலை நாட்கள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மின் விநியோகத்தில் தடை மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம்.
இந்திய மக்கள் தொகையில் 42.3 சதவீதத்தினரும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.2 சதவீதம் விசாயத்தைச் சர்ந்துள்ள இந்தியாவுக்கு பருவ மழை பொழிவு என்பதும் மிகவும் முக்கியான ஒன்று. நாட்டில் பயிர்சாகுபடி நடைபெறும் நிகர நிலப்பரப்பில் 52 சதவீதம் பருவமழை சுழற்சியில் முதலில் வரும் தென்மேற்கு பருவ மழையையே நம்பியுள்ளன.
நாட்டில் மின் உற்பத்தியைத் தவிர, குடிநீர் தேவைக்கான முக்கிய நீர்த்தேங்கள் நிரம்புவதற்கும் இந்தப் பருவமழை மிகவும் முக்கியமானது. எனவே, பருவமழை காலத்தில் சராசரி மழை பொழியும் என்று கணிப்பு நாட்டுக்கு மிகப் பெரிய ஆறுதலைத் தருகிறது. என்றாலும் சாதாரண ஒட்டுமொத்த மழைப்பொழிவு, நாடு முழுவதும் சீரான மற்றும் பரவலான மழை வாய்ப்பை உறுதி செய்யாது. காலநிலை மாற்றும் பருவமழை சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இதனிடையே, மழைநாட்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், கனமழை நிகழ்வு (குறுகிய காலத்தில் அதிக மழை) அதிகரித்து வருவதாகவும், இதனால் அடிக்கடி வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் என்றும் காலநிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment