Published : 15 Apr 2025 06:25 AM
Last Updated : 15 Apr 2025 06:25 AM

இந்தியாவில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் நாடு கடத்​தல்

புதுடெல்லி: இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர்.

இதுகுறித்து அதி​காரி ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: டெல்​லி​யில் மோகன் கார்​டன், உத்​தம் நகர் பகு​தி​களில் போலீ​ஸார் மேற்​கொண்ட அதிரடி சோதனை​யில் விசா காலத்​துக்கு பிறகும் இந்​தி​யா​வில் தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர் சிக்​கினர்.

இவர்​களில் 12 பேர் நைஜீரி​யா​வை​யும் இரு​வர் வங்​கதேசத்​தை​யும் ஒரு​வர் ஐவரி கோஸ்ட் நாட்​டை​யும் சேர்ந்​தவர்​கள்.
சரி​பார்ப்​புக்கு பிறகு இவர்​களை நாடு கடத்த வெளி​நாட்​டினருக்​கான பிராந்​திய பதிவு அதி​காரி உத்​தர​விட்​டார்.

இதையடுத்து அவர்கள் நாடு கடத்​தப்​படு​வதற்​காக தடுப்​புக் காவல் மையத்​துக்கு அனுப்​பி வைக்கப்பட்டனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x