Published : 13 Apr 2025 06:52 AM
Last Updated : 13 Apr 2025 06:52 AM

மே.வங்கத்தில் இந்துக்கள் வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிஹார் மாநிலம் பெகுச​ராய் பகு​தி​யில் செய்​தி​யாளர்​களை நேற்று சந்​தித்த அமைச்​சர் கிரி​ராஜ் சிங் கூறிய​தாவது: மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தில் நடை​பெற்ற வன்​முறை துர​திருஷ்ட​வச​மானது. அனைத்து சமூகத்​தினரின் பாது​காப்​பும் முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் கையில் இருக்​கிறது. இந்​துக்​களின் பாது​காப்பு முஸ்​லிம்​களு​டன் சேர்ந்து மம்​தாவுடைய பொறுப்​பாகும். முர்​ஷி​தா​பாத்​தில் நடை​பெற்ற வன்​முறை, இந்​துக்​கள் மேற்கு வங்​கத்தை விட்டு வெளி​யேற கட்​டாயப்​படுத்​து​வதை காட்​டு​கிறது. இது​போன்ற சட்​ட​விரோத சம்​பவங்​கள் எல்​லாம் மாநில அரசின் கண்​ணெ​திரில் நடை​பெறுகின்​றன. இவ்​வாறு அமைச்​சர் கிரி​ராஜ் சிங் கூறி​னார்.

பாஜக எம்​.பி. பிர​வீன் கந்​தேல்​வால் கூறும்​போது, ‘‘மாநிலத்​தில் அமை​தியை நிலை​நாட்​டு​வ​தில் திரிண​மூல் காங்​கிரஸ் அரசு தோல்வி அடைந்​து​விட்​டது. மேற்​கு​வங்​கத்​தில் வன்​முறையை தடுக்க மாநில அரசு தவறி​விட்​டது. சட்​டம் ஒழுங்கை நிலை​நாட்ட எந்த நடவடிக்​கை​யும் எடுப்​ப​தில்​லை. மம்தா அரசு அமை​தி​யாக இருப்​ப​தைப் பார்த்​தால் வன்​முறையை ஊக்​குவிக்​கிறதா என்ற கேள்வி எழுகிறது’’ என்​று கண்​டனம்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x