Published : 01 Jul 2018 04:42 PM
Last Updated : 01 Jul 2018 04:42 PM
வேலையில்லாதன் என்று அடிக்கடி கூறி கிண்டல் செய்த உறவினர்கள் 3 பேரை இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் நாஸிக்கில் நடந்துள்ளது.
நாஸிக் மாவட்டம், இகாத்புரி பகுதியில் மால்வாடி கிராமம் உள்ளது. இங்கு பெரும்பாலும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் கணபதி சிமேட்(வயது21). 12-ம் வகுப்பு மட்டுமேபடித்த சச்சினுக்கு இன்னும் வேலைகிடைக்காததால், ஊரைச் சுற்றிவந்துள்ளார்.
சச்சின் வீட்டுக்கு அருகே, அவரின் பெரியம்மா, ஹிராபாய் சங்கர் சிமேட்(வயது55) குடும்பத்தினரின் வசித்து வந்துள்ளனர். சச்சின் வேலையில்லாமல் ஊரைச் சுற்றிவருவது குறித்து சச்சின் பெரியம்மா குடும்பத்தினர் அவரை வேலையில்லாதவன் என அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சச்சின் குடும்பத்துக்கும், அவரின் பெரியம்மா குடும்பத்துக்கும் நிலத்தகராறும் இருந்துள்ளது. இதனால், சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம் போல் சச்சின் வெளியே புறப்டும் போது, அவரின் பெரியம்மா குடும்பத்தினர் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சச்சின் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து, பெரியம்மா ஹிராபாய் சங்கர், பெரியம்மா மகன் மனைவி மங்கள் கணேஷ் சிமேட்(வயது30) அவரின் மகன் ரோகித் (வயது4) ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இந்தச் சத்தம் கேட்டு வெளியே விளையாடிக்கொண்டிருந்த மங்கள் கணேஷின் மூத்த மகன் யாஷையும்(வயது6) கத்தியால் குத்த சச்சின் முயன்றார். ஆனால், அந்த சிறுவன் கழுத்தில் சிறிய காயத்துடன் தப்பி வெளியே ஓடிவந்துவிட்டார்.
இதைப் பார்த்த பொதுமக்கள், வீட்டுக்குள் சென்று சச்சினை சுற்றிவளைத்துப் பிடித்து, போலீஸுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சச்சினை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து நாஸிக் மாவட்ட டிஎஸ்பி அதுல் ஜின்டே கூறுகையில், கொலை செய்த சச்சினை அவரின் பெரியம்மா குடும்பத்தினர் வேலையில்லாதவர் என்று கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் 3 பேரைக் கொலை செய்துள்ளார். இதில் ஒரு சிறுவன் காயத்துடன் தப்பி இருக்கிறார். இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இந்தக் கொலை இந்த தகராறில் எழுந்ததா என்றும் தெரியவில்லை.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கத்திக்குத்தில் காயமடைந்த சிறுவன் யாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்ந. கொலை செய்த சச்சின் மீது ஐபிசி 302, 307, 326 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT