Published : 30 Jul 2018 05:01 PM
Last Updated : 30 Jul 2018 05:01 PM
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தள்ளுபடி செய்யப்பட்ட சாத்வி ப்ரக்யா சிங் மற்றும் சமீர் குல்கர்னி ஆகியோரின் மனுக்களை இன்று மும்பை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேபோல, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித் தன்னை விடுவிக்கக் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்படட நிலையில் அவரது மனுவும் நீதிமன்றத்திற்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதுகுறித்து குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் ப்ரசாந்த் மாக்கு கூறுகையில்,
கர்னல் புரோஹித் விடுவிக்கக் கோரும் மனு ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கெண்டதுதான். சாத்வி ப்ரக்யா சிங்கின் மனு, விசாரணை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த வழக்கில் கூட்டு விசாரணை ஆகஸ்ட் 13 ம் தேதி நடத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 29, 2009 அன்று நாசிக்கின் மாலேகான் நகரில் நிகழ்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில், ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 101 பேர் காயமடைந்தனர்.
நவம்பர் 2008 ல், பயங்கரவாத எதிர்ப்புக் குழு, இவ்வழக்கு தொடர்பாக 11 பேரை கைது செய்தது. எனினும், ஏப்ரல் 2011 இல், விசாரணை தேசிய புலனாய்வு ஏஜென்ஸிக்கு மாற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT