Published : 28 Mar 2025 04:06 AM
Last Updated : 28 Mar 2025 04:06 AM

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று விரைவில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ:“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன” என்று ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்ய சர்​வ​தேச விவ​கார கவுன்​சில் (ஆர்​ஐஏசி) சார்​பில், “ரஷ்யா - இந்​தியா : புதிய இருதரப்பு கொள்​கை” என்ற தலைப்​பில் கடந்த புதன்​கிழமை மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் பங்​கேற்​றார். அதன்​பின்​னர் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் 3-வது முறை பிரதம​ராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட பிறகு, முதல் நாடாக ரஷ்​யா​வுக்கு நரேந்​திர மோடி வந்​தார். அப்போது, இந்​தி​யா​வுக்கு வரவேண்​டும் என்று அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்​தார். பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று அதிபர் புதின் விரை​வில் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார். அதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்த பயணத்​தின் போது “பு​திய பொருளா​தார திட்​டம் - 2030” குறித்து தலை​வர்​கள் இரு​வரும் விரி​வாக ஆலோ​சனை நடத்த உள்​ளனர். மேலும், இரு நாட்டு வர்த்​தகத்தை 100 பில்​லியன் டாலர் அளவுக்கு அதி​கரிக்க தலை​வர்​கள் இரு​வரும் ஒப்​புக் கொண்​டுள்​ளனர். தற்​போது இரு நாடு​களுக்கு இடை​யில் 60 பில்​லியன் டாலர் அளவுக்கு வர்த்​தகம் இருக்​கிறது. சென்​னை​யில் இருந்து ரஷ்​யா​வின் விளாடிவோஸ்​டோக் துறை​முகம் வரை கடல் வழி வர்த்தக தடத்தை அமல்​படுத்த
இரு நாடு​களும் தீவிர​மாக இருக்​கின்​றன. இவ்​வாறு ரஷ்ய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் கூறி​னார்.எனினும், எந்த மாதத்​தில் எந்த தேதி​யில் அதிபர் புதின் இந்​திய பயணம் மேற்​கொள்ள இருக்​கிறார் என்ற தகவலை அமைச்​சர் செர்ஜி லாவ்​ரோவ் தெரிவிக்​க​வில்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x