Last Updated : 27 Mar, 2025 05:38 AM

17  

Published : 27 Mar 2025 05:38 AM
Last Updated : 27 Mar 2025 05:38 AM

கூட்டணி குறித்து பாஜக தலைமையிடம்தான் பேசுவோம்: அமித்ஷா, நட்டாவிடம் அதிமுக தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்

புதுடெல்லி: தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி தலை​மை​யில் அதி​முக தலை​வர்​கள் டெல்​லி​யில் நேற்று முன் தினம் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்​தித்து பேசினர்.

அமித் ஷாவுட​னான சந்​திப்​பில் முன்​னாள் முதல்​வர் பழனிச்​சாமி, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் டாக்​டர் எம்​.தம்​பிதுரை, சி.​வி. சண்​முகம், முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி ஆகியோர் பங்​கேற்​றனர்.

முன்​ன​தாக பாஜக தலை​வர் நட்​டாவை தம்​பிதுரை மட்​டும் சந்​தித்​தார். இந்த சந்​திப்​பு​களின் போது தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக - பாஜக மீண்​டும் கூட்​டணி வைப்​பது குறித்து ஆலோ​சனை நடத்​தி​ய​தாக கட்சி வட்​டாரங்​கள் கூறின. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தலை​வர்​கள் கூறும்​போது, ‘‘ஒபிஎஸ், சசிகலா உள்​ளிட்ட அதிருப்தி தலை​வர்​களை​யும் உடன் சேர்க்க அதி​முக​விடம் அறி​வுறுத்​தப்​பட்​டது. அவர்​களுக்கு விருப்​பம் இல்​லாத இந்த சேர்க்கை குறித்து யோசிப்​ப​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். அண்ணா விவ​காரத்​தில் அண்​ணா​மலை - அதி​முக தலை​வர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலால் எடப்​பாடி பழனிச்​சாமி அவரை தவிர்க்​கிறார்.

இதனால், பாஜக தேசிய தலை​வர்​களு​டன் கூட்​டணி பேச்​சு​வார்த்​தையை நேரடி​யாக பேச அவர் விரும்​பு​கிறார். சின்​னம் மற்​றும் தலை​வர்​கள் மீதான வழக்​கு​களை தேர்​தலுக்கு முன்​பாக நிரந்​தர​மாக முடிக்​க​வும் அதி​முக​வினர் விரும்​பு​கின்​றனர். கூட்​ட​ணிக்கு முன்​பாக மீண்​டும் தம்​பிதுரைக்கு துணை சபா​நாயகர் பதவி பெற​வும் விருப்​பம் காட்​டினர். தமிழ்​நாட்​டில் பாஜக​வுக்கு ஆதரவு பெருகி வரு​கிறது. எனவே, இந்த முறை அதி​முக​வுடன் கூட்​டணி வைப்​ப​தால் திமுக ஆட்​சிக்கு முடிவு கட்​டப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

எனினும் இந்த சந்​திப்​பு​கள் குறித்து 2 கட்​சிகள் சார்​பிலும் அதி​காரப்​பூர்​வ​மான தகவல்​கள் இல்​லை. ஆனால், இந்த சந்​திப்​புக்கு முன்​ன​தாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நாடாளு​மன்​றத்​தில் பேசிய காட்​சிப் பதிவை தனது எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டிருந்​தார். அதில், “தம்​பிதுரைஜிக்கு நான் உறுதி அளிக்​கிறேன். 2026-ல் தமிழ்​நாட்​டில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமை​யும். மது, ஊழல் என இரண்​டுக்​கும் முடிவு கட்​டப்​படும்” என்று அமித் ஷா பேசி​யுள்​ளார்.

டெல்லி சந்​திப்​புக்கு முன்​ன​தாக பாஜக - அதி​முக தலை​வர்​கள் சிலர் தமிழகத்​தில் கூட்​டணி அமைப்​பது குறித்து பேசி​யுள்​ளனர். இனி வெளிப்​படை​யாக மேலும் சில சந்​திப்​பு​களை நடத்​திய பின் அதி​காரப்​பூர்​வ​மாக கூட்​ட​ணி குறித்​த அறி​விப்​பு வெளி​யாகும்​ என்​று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x