Published : 25 Mar 2025 06:11 AM
Last Updated : 25 Mar 2025 06:11 AM

பாட்னாவில் ரயில்வே இறப்பு உரிமை கோரலில் மோசடி: ரூ.8 கோடி சொத்துகள் முடக்கம் 

புதுடெல்லி: பிஹார் மாநிலம் பாட்னாவில் இறந்த நபர்கள் தொடர்பான ரயில்வே உரிமை கோரல் நிதியில் பெருமளவு மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபோன்ற இறப்பு உரிமை கோரல் தொடர்பான வழக்கில், நஷ்டஈட்டு தொகையை ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம்தான் முடிவு செய்து உத்தரவிடுகிறது. இதில் பல கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சிபிஐ வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிவர்த் தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது. இதில் வழக் கறிஞர்கள், ரயில்வேயில் பணி புரியும் அடையாளம் தெரியாத ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இந்த வழக்கில் ரூ.8.2 கோடி மதிப்புள்ள 24 சொத்து களை அமலாக்கத் துறை கடந்த வெள்ளிக்கிழமை முடக்கி உள்ளது. ஆனால், யாருடைய சொத்துகள் என்று தெரிவிக்கவில்லை.

முன்னதாக ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாய மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி 24-ம் தேதி அமலாக்கத் துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதில் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இருந்த ஆர்.கே.மிட்டல் மற்றும் அவருக்கு நெருக்கமான வழக்கறி ஞர்களின் வீடுகள், அலுவலகங் களில் சோதனை நடத்தப்பட்டது. விபத்துக்கு இழப்பீடு கோரும் வழக்குகளில், சிறிய தொகை மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கணிசமான தொகை வழக்கறிஞர்கள் உட்பட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x