Published : 24 Mar 2025 05:38 AM
Last Updated : 24 Mar 2025 05:38 AM
கேரள விவசாயி வளர்க்கும் 1 அடி 3 அங்குலம் உயரம் உள்ள குட்டை வெள்ளாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த விவசாயி பீட்டர் லெனு. அவர் தனது பண்ணையில் கனடாவைச் சேர்ந்த குட்டையின ஆட்டை வளர்த்து வருகிறார். இந்த இன ஆட்டின் கால்கள் 53 செ.மீக்கு மேல் வளராது. கறுப்பு நிறத்தில் உள்ள இந்த ஆட்டுக்கு கறும்பி எனப் பெயர். கடந்த 2021-ல் பிறந்த இந்த ஆட்டுக்கு தற்போது 4-வயது. முழு வளர்ச்சி அடைந்த நிலையில் இதன் உயரம் 1 அடி 3 இன்ச்(40.50 செ.மீ) ஆக உள்ளது. இவரது பண்ணையில் உள்ள மிகச் சிறிய விலங்கு கறும்பிதான். மிகவும் குட்டையாக இருப்பதால், இதை கின்னஸ் சாதனையில் இடம் பெற செய்யலாம் என பீட்டர் லெனுவின் நண்பர் ஒருவர் ஆலோசனை தெரிவித்தார். அதற்கான முயற்சிகளில் லெனு இறங்கினார். இதற்கு பலன் கிடைத்தது. உலகின் மிக குட்டையான வெள்ளாடாக கறும்பி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து பீட்டர் லெனு கூறுகையில், ‘‘ கறும்பி ஆடு, 3 கிடாக்கள், 9 பெட்டை ஆடுகளுடன் வசிக்கிறது. தற்போது சினையாக உள்ள கறும்பி விரைவில் குட்டி போடவுள்ளது. நான் எனது பண்ணையில் வளர்க்கும் அனைத்து விலங்குகளின் மரபுதன்மையை பராமரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்துகிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...