Published : 18 Mar 2025 05:10 AM
Last Updated : 18 Mar 2025 05:10 AM
கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் 2 பெண்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அவர்களை பிடித்து சோதனையிட்டதில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சிக்கின. இதையடுத்து தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இதில் முதல் குற்றவாளியான பம்பா ஃபன்டா (31) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவரது கூட்டாளியான அபிகேல் அடோனிஸ் (30), கடந்த 2020 முதல் மங்களூருவில் வசிக்கிறார். கடந்த வாரம் மங்களூருவில் போதைப் பொருள் விற்ற வழக்கில் கைதான ஹைதர் அலி (25) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த 2 பெண்கள் குறித்த தகவல் கிடைத்தது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 6 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கைதாகியுள்ள 2 பெண்களும் மங்களூருவில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் 37 முறை மும்பைக்கும், 22 முறை பெங்களூருவுக்கும் விமானத்தில் பயணித்துள்ளனர். சூட்கேஸில் போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அனுபம் அகர்வால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment