Last Updated : 17 Mar, 2025 06:05 AM

 

Published : 17 Mar 2025 06:05 AM
Last Updated : 17 Mar 2025 06:05 AM

தங்கம் கடத்த ரன்யா ராவுக்கு போலீஸார் உதவி: வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அறிக்கை

பெங்களூரு: கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தால் கடந்த 3ம் தேதி பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்​துள்ள வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவ‌ரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின.

ரன்யா ராவை விசா​ரித்​த​தில் அவருக்கு சர்​வ​தேச தங்க கடத்​தல் கும்​பல் மற்​றும் பெங்​களூரு​வின் முக்​கிய புள்​ளி​களு​டன் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து பெங்​களூரு நட்​சத்​திர விடு​தி​யின் உரிமை​யாளர் தருண் ராஜ் கைது செய்​தனர். இதையடுத்து சிபிஐ மற்​றும் அம‌லாக்​கத்​துறை அதி​காரி​கள் ரன்யா ராவ் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​ற‌னர்.

இவ்​வழக்கு குறித்து சிபிஐ, அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் பெங்​களூரு​வில் நேற்று வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினர். அப்​போது வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அதிகாரிகள தரப்பில் கூறியதாவது: பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் பயணி​களுக்கு மேற்​கொள்​ளப்​படும் வழக்​க​மான சோதனை​கள் அவருக்கு மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. அவருக்கு விஐபி அந்​தஸ்து வழங்​கி, விமானத்​தில் இருந்து தனி பாதை​யில் செல்லஅனு​ம​தித்​துள்​ளனர். கர்​நாடக காவல்​துறை​யில் உயரிய பொறுப்​பில் இருந்த அதி​காரி​களின் உத்​தர​வால், போலீ​ஸாரே அவரை வரவேற்று சோதனை வளை​யத்​தில் இருந்து காப்​பாற்​றி​யுள்​ளனர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறியதாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதுதொடர்​பான தகவலை வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் பொருளா​தார குற்​றங்​களை விசா​ரிக்​கும் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அறிக்​கை​யாக​வும் தாக்​கல் செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x