Last Updated : 16 Jul, 2018 11:08 AM

 

Published : 16 Jul 2018 11:08 AM
Last Updated : 16 Jul 2018 11:08 AM

ஆந்திராவில் வெள்ளம்: பேரிடர் மீட்புப் படையால் 55 பேர் மீட்பு

வெள்ளம் காரணமாக ஆற்றின் கரையோர கிராமங்களிலுள்ள மக்கள் தவித்துவரும் நிலையில் ஸ்ரீகாகுளம் அருகே 55 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:

ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வம்சத்ரா ஆற்றில் கட்டுக்கடங்காமல் வெள்ளம் பெருகி வருவதால் அதன் தடுப்பணையான கோட்டா பாரேஜ் அணை திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படையும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர்.

இதுவரை 55 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x