Published : 12 Mar 2025 05:37 AM
Last Updated : 12 Mar 2025 05:37 AM

இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு ‘மல்ஹர்’ சான்றிதழ்: மகாராஷ்டிர அமைச்சர் அறிமுகம்

மும்பை: ம​கா​ராஷ்டிர மீன்​வளம் மற்​றும் துறை​முக மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் நிதேஷ் ராணே, ஆட்​டிறைச்சி கடைகளுக்கு மல்ஹர் சான்​றிதழ் வழங்​கும் நடை​முறையை அறி​முகப்​படுத்தி உள்​ளார்.

இதுகுறித்து அமைச்​சர் ராணே கூறிய​தாவது: மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள இந்து சமு​தா​யத்​தினருக்​காக முக்​கிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. முற்​றி​லும் இந்​துக்​களால் நடத்​தப்​படும் சரி​யான ஆட்​டிறைச்சி கடைகளை அடை​யாளம் காண ‘மல்​ஹர்’ சான்​றிதழ் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. அத்​துடன் இறைச்​சி​யில் கலப்​படம் இல்லை என்​பதை உறுதி செய்​ய​வும் இது உதவும்.

இந்​துக்​கள் மல்​ஹர் சான்​றிதழ் பெற்ற கடை​யில் ஆட்​டிறைச்சி வாங்க வேண்​டும். இந்த சான்​றிதழ் பெறப்​ப​டாத கடை​யில் ஆட்​டிறைச்சி வாங்​கு​வதை தவிர்க்க வேண்​டும். மேலும் இந்த முயற்சி இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் பொருளாதார ரீதி​யாக முன்​னேற்​றம் அடைய​வும் உதவும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இஸ்​லாமியர்​கள், தங்​கள் சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவர்​கள் நடத்​தும் கடைகளில் ‘ஹலால்’ சான்​றிதழ் பெற்ற இறைச்​சியை மட்​டுமே வாங்​கு​கின்​றனர். சில மாநிலங்​களில் இந்த ஹலால் இறைச்​சிக்கு எதி​ராக வலது​சாரி அமைப்​பு​கள் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டன. இந்​நிலை​யில்​தான் இந்​துக்​களுக்​காக மல்​ஹர் சான்​றிதழ் பெற்ற இறைச்சி அறி​முகம்​ செய்​யப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x