Published : 12 Mar 2025 05:27 AM
Last Updated : 12 Mar 2025 05:27 AM
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 22.49 சதவீதத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யேஷோ நாயக் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, புதுப்பிக்தக்க எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து அதற்கான திட்டங்களை துரிதகதியில் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற 26-வது பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி, வரும் 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என்பதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. எனவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கான நிதி உதவி 2020-21-ல் ரூ.2,666.34 கோடியாக மட்டுமே இருந்தநிலையில் அது 2023-24-ல் ரூ.6,119.18 கோடியாக குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.
2024-25 ஜனவரி வரையில் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு 22.49 சதவீதமாக உள்ளது. குறிப்பாக இந்தியாவின் சோலார் மின் உற்பத்தி திறன் 2014-ல் 2.82 ஜிகாவாட்டாக மட்டுமே இருந்த நிலையில் 2025-ல் 100 ஜிகாவாட்டாக மாபெரும் எழுச்சி கண்டுள்ளது. இவ்வாறு நாயக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment