Published : 09 Mar 2025 06:37 AM
Last Updated : 09 Mar 2025 06:37 AM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் முழுக்க பெண்களே வந்தே பாரத் ரயிலை இயக்கினர். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இதற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சர்வதேச பெண்கள் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினலில் இருந்து ஷீரடி செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலை (22223) முழுக்க முழுக்க பெண்களே நேற்று இயக்கினர். இதற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இந்த ரயிலை இயக்கிய ஓட்டுநர், துணை ஓட்டுநர். உதவியாளர், ரயில் மேலாளர், டிக்கெட் பரிசோதகர் ரயில் பணியாளர்கள் என அனைவரும் பெண்களே இதில் இடம்பெற்றனர் என்று மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...