Published : 07 Mar 2025 01:52 AM
Last Updated : 07 Mar 2025 01:52 AM
மணிப்பூரின் சூரஜ்சந்த்பூர், கிழக்கு இம்ப்பால், காங்போக்பி ஆகிய 3 மாவட்டங்களில் காவல் நிலையங்களில் மேலும் 32 ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
மணிப்பூரில் குகி மற்றும் மைத்தேயி இனத்தவர் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் இனக்கலவரம் ஏற்பட்டு வந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டடோர் இறந்தனர். இந்த கலவரம் நீண்டகாலமாக தொடர்ந்து ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதால் முதல்வர் பிரேன் சிங் கடந்த மாதம் 13-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அதன் பின்பு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருப்பவர்கள், போலீஸாரிடம் சரணடைந்து ஆயுதங்களை தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என கடந்த மாதம் 20-ம் தேதி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கெடு காலத்துக்குள் சரணடைபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என மணிப்பூர் நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.
இதனால் போராட்டக்காரர்கள் பலர் கடந்த வாரம் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு போலீஸாரிடம் சரணடைந்தனர். சட்டவிரோத ஆயதங்களை ஒப்படைப்பதற்கான கெடுவை இன்று மாலை 4 மணி வரை நீட்டித்து மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மணிப்பூரின் 3 மாவட்டங்களில் மேலும் 32 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் நேற்று போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment