Published : 05 Mar 2025 05:19 AM
Last Updated : 05 Mar 2025 05:19 AM
இந்தியாவிலிருந்து விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2024-ம் ஆண்டில் 67.5 லட்சத்தைத் தொட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவுக்கு முந்தைய விறுவிறுப்பான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, கரோனாவுக்கு முந்தைய 2019 காலகட்டத்தில் விசா வேண்டி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஆணடில் அந்த எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது .
இதுகுறித்து விசா ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விஎப்எஸ் குளோபலின் தலைமை செயல்பாட்டு அதிகாரியான (தெற்கு ஆசியா) யம்மி தல்வார் கூறுகையி்ல், “ கனடா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வி்ட்சர்லாந்து, சவுதி அரேபியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இந்தியர்களின் சுற்றுலாவுக்கான முக்கிய விருப்பத் தேர்வு நாடுகளாக உள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டில் 3 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணமாகியுள்ளனர். இது, 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 2.8 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.4 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், 2019-ம் ஆண்டின் 2.7 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.3 சதவீதம் உயர்வாகும்.
சர்வதேச பயணத்துக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பாண்டிலும் இந்த விறுவிறுப்பு தொடரும்.
ஆனால், கரோனாவுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு இன்னும் சூடுபிடிக்கவில்லை. மத்திய சுற்றுலா அமைச்சக புள்ளிவிவரத்தின்படி 2024-ல் 96.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வந்துள்ளனர். இது, 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 95.2 லட்சத்தை காட்டிலும் 1.4 சதவீதம் மட்டுமே அதிகம். அதேநேரம், 2019 உடன் (1.1 கோடி) ஒப்பிடுகையில் இது 11.6 சதவீதம் குறைவு " என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment