Last Updated : 13 Jul, 2018 05:11 PM

 

Published : 13 Jul 2018 05:11 PM
Last Updated : 13 Jul 2018 05:11 PM

ட்விட்டரில் பல லட்சம் போலி கணக்குகள் நீக்கம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது

ஆயிரக்கணக்கான செயல்படாத மற்றும் சந்தேகத்திற்குரியவர்களின்  கணக்குகளை நீக்கியதால் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பிரதமர் மோடியை அவரது ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 2, 84, 746 எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது 43.1 மில்லியன் எண்ணிக்கையில் உள்ளவர்கள் பின்தொடர்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 17,503 எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது 7.33 மில்லியன் எண்ணிக்கையில் உள்ளவர்கள் பின்தொடர்கிறார்கள்.

 

இதுபோலவே பிறதலைவர்களின் ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. பிற தலைவர்களின் நீக்கப்பட்ட ட்வீட்டர் கணக்கு விவரம் வருமாறு:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் - 74,132

காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் - 1,51,509

திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ' பிரீன் - 10,902

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி - 41,280

இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் கணக்கில் செயல்பட்டு வருபவர்கள் தவிர்த்து, செயல்படாமல் ஆயிரக்கணக்கான கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் உண்மை விவரங்கள் இல்லாத நிலையிலும், தொடர்ந்து செயல்படாத நிலையிலும் உள்ளதால் அவை 'பூட்டப்பட்ட கணக்குகள்' என்று குறிப்பிடப்பட்டு ட்விட்டர் நிர்வாகத்தால் அவை நீக்கப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து ட்விட்டர் மைக்ரோ வலைதளம் நேற்று முன்தினம் தனது கணக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

''உலக நடப்புகளின் ஒரு பகுதியாகவும் நம்பிக்கை வளர்க்கும் உலகளாவிய முயற்சியாகவும் ஆரோக்கியமான உரையாடல்களை ஊக்குவிக்கவும் ட்விட்டர் தனது சேவையின் ஒவ்வொரு பகுதியும் விளங்குகிறது.

இந்த வாரம், உலகெங்கிலும் உள்ள பின்தொடர்பவர்களில் இந்த பூட்டப்பட்ட கணக்குகளை ட்விட்டர் கணக்கிலிருந்து இருந்து அகற்றுகிறோம், இதன் விளைவாக, பல சுயவிவரங்கள் தொடர்பான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்'' எனறு பதிவிட்டு இருந்தது.

செயல்படாத மற்றும் போலியாக செயல்படுபவர்களின் ட்விட்டர் எண்ணிக்கை குறைக்கப்படுவது ஒருவகையில் நல்லதுதான், இதனால் உண்மையானவர்களின் கருத்துக்களை மட்டுமே எதிர்கொள்ளமுடியும் என்கின்றனர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இணையவாசிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x