Last Updated : 12 Jul, 2018 10:57 AM

 

Published : 12 Jul 2018 10:57 AM
Last Updated : 12 Jul 2018 10:57 AM

விரல்களில் இருந்து உதிர்ந்த கின்னஸ் சாதனை: 66 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்பட்ட உலகின் மிக நீண்ட நகங்கள்

பூனாவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலால், கின்னஸ் உலக சாதனைக்காக வளர்த்திருந்த தனது நீண்ட நகங்களை 66 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெட்டினார்.

இவ்வளவுநாளும் வளர்த்திருந்த தனது 909.6 செ.மீ. நீளமுள்ள நகத்தை டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நகம் வெட்டுவதற்கான விழாவில் வெட்டினார். தனது இடது கரத்தில் 1952லிருந்து இந்த நகங்களை இவர் வளர்த்து வந்தார். தற்போது இவருக்கு வயது 82.

சிலாலின் நீண்ட கட்டை விரல் நகம் மட்டும் 197.8 செ.மீ. நீளமுடையது. ஆட்காட்டி விரல் நகரத்தின் நீளம் 164.5 செ.மீ. நடுவிரல் 186.6 செ.மீ. மோதிர விரல் 181.6 செ.மீ. மற்றும் சுண்டு விரல் 179.1 செ.மீ. ஆகும்.

 

'எக்காலத்திற்குமான சாதனையாக ஒரே கையில் மிக நீண்ட விரல் நகங்கள் என்று குறிபபிட்டு இவருக்கு 2015ஆம் ஆண்டு இவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டது.

அடடா அதற்குள் வெட்டிவிட்டாரா நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற கவலையே வேண்டாம்.

இனி நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ரிப்லேவின் 'பிலிவ் இட் ஆர் நாட்' காட்சியகத்திற்கு சென்றால் இனி எப்போதும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x