Published : 26 Jul 2018 08:06 AM
Last Updated : 26 Jul 2018 08:06 AM
சந்திர கிரகணம் நாளை இரவு 11.54 மணிக்கு தொடங்கி, சனிக்கிழமை அதிகாலை 3.49 வரை நிகழ்கிறது. இதனையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடை, நாளை மாலை 5 மணிக்கு சாத்தப்படுகிறது. பின்னர், சனிக்கிழமை காலை 4.15 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
தொடர்ந்து, கோயிலை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி, சுப்ரபாத சேவை நடைபெறும். அதன் பின்னர், ஆர்ஜித சேவைகள் நடைபெறுகிறது. இதையடுத்து, பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் உள்ள இலவச அன்னதான மையமும் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள நாத நிராஜனம் மேடை அருகே இலவச உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 9 மணி முதல் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் எனவும் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு தெரிவித்துள்ளார்.
பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் மட்டும், மூலவருக்கு நவக்கிரஹ கவசம் இருப்பதால், நடை மூடப்படாமல் கிரகண கால அபிஷேகம் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT