Published : 07 Aug 2014 07:46 PM
Last Updated : 07 Aug 2014 07:46 PM
கொலையாளிகளுக்கு ஜாமீன் மூலம் நீதித்துறை கருணை காட்டுவது கூடாது என்று உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணை ஒன்றில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
கொலை வழக்கில் ஜாமீன் மனு ஒன்றின் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதி முகோபாத்யா தலைமையிலான பெஞ்ச் நகரங்களில் கொலைக்கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாயன்று தலைநகர் டெல்லியில் உள்ள மதாங்கிர் பகுதியில் 18 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"டெல்லியில் இளைஞர்கள் கைகளின் கத்திகளுடன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிசிடிவி அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது" என்று நீதிபதி முகோபாத்யா தெரிவித்தார்.
செவ்வாயன்று நடந்த படுகொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 வயதிற்கும் கீழானவர்களும் அடங்குவர். உறவினர் ஒருவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அப்துல் மதின் அப்துல் கயூம் மற்றும் 3 கொலையாளிகள் செய்த ஜாமீன் மனுவை இன்று நீதிபதிகள் பெஞ்ச் விசாரித்தனர்.
அப்போது 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் ஒருவர் இரும்புத் தடியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட நீதிபதி முகோபாத்யா “மும்பையில் இரும்புத் தடிகள், டெல்லியில் கத்திகள்” என்று கூறினார்.
மேலும், "ஜாமீன் கொடுக்கக் கூடாது, காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யட்டும், இரவில் நாங்கள் கைது செய்கிறோம், மறுநாள் காலை நீதிபதிகள் ஜாமீன் கொடுத்து விடுகின்றனர் என்று காவல்துறையினர் கதறுகின்றனர்” என்று நீதிபதி முகோபாத்யா கடுமையாகக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT