காதலர்களின் ‘ஆட்டோகிராப்’ செடி

காதலர்களின் ‘ஆட்டோகிராப்’ செடி

Published on

விசாகப்பட்டினம்: உலகெங்கிலும் உள்ள காதலர்கள் இன்று காதலர் தினத்தை மிகவும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்காகவே ஒரு செடி இந்த பூமியில் உள்ளது. அது காதலர்களின் செடியாக பெயர் சூட்டப்பட்டு புகழ் பெற்று வருகிறது.

காதலர்கள் தங்கள் பெயரை பழங்கால சுவர்கள், மரங்கள் போன்றவற்றில் பொறித்து வைப்பது வழக்கம். இவர்களுக்காகவே ஒரு செடி உள்ளது. இதனை 'வேலண்டைன்ஸ் ட்ரீ’ என்று அழைக்கின்றனர். இந்த செடியின் தாவரப் பெயர் ‘க்ளுசியா ரோஸியா’ ஆகும். அதிக வெப்பம் உள்ள இடத்தில் இது வளர்கிறது. இது தற்போது விசாகப்பட்டினத்தில் ஒரு தோட்டத்தில் காணப்படுகிறது.

இந்த செடியின் இலைகள் மிகவும் தடிமனாக உள்ளன. இதில் காதலர்கள் தங்களின் பெயர்களை நகத்தால் எழுதி வைக்கின்றனர். இந்த இலை உதிரும் வரை கூட இதன் மீதான எழுத்துகள் அழியாமல் இருக்கும். இதுவே இதன் தனிச் சிறப்பாகும். ஆதலால் இதனை ‘ஆட்டோகிராப் செடி’ என்றும் அழைக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in