Published : 14 Feb 2025 01:57 AM
Last Updated : 14 Feb 2025 01:57 AM

இமாச்சலில் சைவ உணவகத்தை தொடங்கும் கங்கனாவுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து

காதலர் தினத்தையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுத்த சைவ உணவகத்தை இன்று திறக்கும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்துக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்.பி.யாக உள்ளார். கடந்த காலங்களில் இவர் கூறும் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினரின் முக்கிய தலைவர்களை உடனடியாக ஆத்திரமூட்டும் வகையில் அமையும். இதற்காக அவரை பலமுறை காங்கிரஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் கங்கனா, இமாச்சலின் மனாலியில் தி மவுன்டயின் ஸ்டோரி கபே என்ற புதிய சைவ உணவகத்தை காதலர் தினமான இன்று திறப்பதாகவும், இது தனது நீண்ட கால கனவு என்பதையும் விளக்கியுள்ளார். இந்த அறிவிப்பை அவரின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக காங்கிரஸ் கட்சியிலிருந்தும் காங்கனாவுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட பதிவில், “ சுத்த சைவ உணவகத்தை இமாச்சலில் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை கண்டதில் மிக்க மகிழ்ச்சி. அங்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இமாச்சலின் அற்புதமான சைவ உணவு வகைகளை பரிமாறி அசத்துவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முயற்சி அனைத்து தளங்களிலும் வெற்றி அடைய உங்களுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கேரள காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இந்த வாழ்த்து செய்து வெளியிடப்பட்டதா என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர், உணவு இடைவெளையின்போது பள்ளி மாணவர் ஒருவர் இந்த கணக்கை இயக்கியுள்ளார் என்பதில் எனக்கு 100 சதவீதம் சந்தேகமில்லை என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x