Published : 10 Feb 2025 07:20 AM
Last Updated : 10 Feb 2025 07:20 AM

ஆம் ஆத்மி தோல்வியால் முதல்வர் ஆதிஷி ராஜினாமா: ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தார்

புதுடெல்லி: டெல்லி சட்டப்​பேர​வைத் தேர்​தலில் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வர் ஆதிஷி தனது பதவியை ராஜினாமா செய்​தார்.

டெல்​லி​யில் மொத்தம் உள்ள 70 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 22 தொகு​தி​களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்​தது. கடந்த 27 ஆண்டுக்​குப் பின்னர் பாஜக 48 இடங்​களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்​பற்றி உள்ளது. காங்​கிரஸ் தொடர்ந்து 3-வது தேர்​தலிலும் ஓர் இடத்​தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலை​யில், டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்​சேனாவை ராஜ்நிவாஸில் நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஆதிஷி வழங்​கினார்.

டெல்​லி​யில் மதுபான ஊழல் வழக்​கில் ஆம் ஆத்மி ஒருங்​கிணைப்​பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்​யப்​பட்​டார். எனினும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்​யாமல், சிறை​யில் இருந்தே ஆட்சி நிர்​வாகத்தை கவனித்​தார்.

பின்னர் ஜாமீனில் வெளி​யில் வந்த கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்​தார். அவருக்​குப் பதில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஆதிஷியை முதல்​வ​ராக்​கினார். இதன் மூலம் டெல்​லி​யில் பாஜக.​வின் சுஷ்மா சுவராஜ், காங்​கிரஸின் ஷீலா தீக்​சித் ஆகியோ​ருக்கு அடுத்து 3-வது பெண் முதல்​வராக ஆம் ஆத்மி​யின் ஆதிஷி கடந்த ஆண்டு செப்​டம்பர் மாதம் பதவி​யேற்​றார்.

கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி சட்டப்​பேர​வைத் தேர்​தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்​களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்​தது. ஆனால், இந்தத் தேர்​தலில் 22 இடங்களை மட்டுமே அக்கட்​சி​யால் பிடிக்க ​முடிந்​தது. எனினும், டெல்​லி​யின் கல்​காஜி தொகு​தி​யில் போட்​டி​யிட்ட ஆ​திஷி வெற்றி பெற்றார். கேஜ்ரிவால் உட்பட முக்கியத் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x