Published : 02 Feb 2025 08:05 AM
Last Updated : 02 Feb 2025 08:05 AM

மத்திய பட்ஜெட் 2025-26: எந்தெந்த துறைகள், திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

பாதுகாப்புத் துறை: நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கலான பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 2025-26-ம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.6,81,210 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தத் தொகை ரூ.6,21,940 கோடியாக இருந்தது. வரும் நிதியாண்டில் பாதுகாப்புத்துறையின் வருவாய் செலவினம் ரூ.4,88,822 கோடியாக இருக்கும். இதில் பென்ஷனுக்கான பங்கு ரூ.1,60,795 கோடியும் அடங்கும். ரூ.48,614 கோடியில் விமானங்கள், விமான இன்ஜின்கள் வாங்குவதற்கும், ரூ.24,390 கோடி கடற்படைப் பிரிவுக்கும் ஒதுக்கப்படும். மேலும் ரூ.63,099 கோடி இதர கருவிகள் வாங்குவதற்கு செலவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை: வரும் 2025-26 நிதியாண்டுக்கு சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இது நடப்பு நிதியாண்டின் ரூ.2.8 லட்சம் கோடியைவிட 2.41 சதவீதம் அதிகம். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (என்எச்ஏஐ) ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கப்படும். இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் என்எச்ஏஐ-யின் கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக இருந்தது. இது 3-வது காலாண்டு முடிவில் ரூ.2.76 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. வரும் நிதியாண்டில் கடன் அளவை மேலும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குடிநீர், சுகாதாரத்துக்கு: வரும் நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்காக ரூ.67,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 15 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், இதில் நதிநீர் வளர்ச்சி மற்றும் கங்கை புனரமைப்புத் திட்டத்துக்காக ரூ.25,276 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நமாமி கங்கா மிஷன்-2 திட்டத்துக்கு ரூ.3,400 கோடி தரப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக ரூ.7,192 கோடியும், டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி தேசிய குடிநீர், சுகாதார இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.89.53 கோடியும் ஒதுக்கப்படும். பழங்குடி மக்களுக்கு குடிநீர் வசதி அளிக்கும் பிரதமரின் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (பிஎம்-ஜன்மன்) திட்டத்துக்கு ரூ341.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் நிர்வாகத் திட்டத்துக்காக ரூ.1,780 கோடியும், நிலத்தடி நீர் ஒழுங்கமைப்பு முயற்சிகளுக்காக ரூ.509 கோடி ஒதுக்கப்பட்டுளளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு: பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.26,889 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகள்மேம்பாட்டுக்காக அந்தத் துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.26,889.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் இது சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அதிகமாகும்.

குழந்தைகள், சிறுமிகளுக்கு சத்தான உணவுகிடைப்பதை உறுதி செய்து அவர்களது ஆரோக்கியத்தை பலப்படுத்தவும் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கவும் அங்கன்வாடி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும் சக்க்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ.21,960 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தின் கீழ் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட 75 பழங்குடியின குழுக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக பட்ஜெட்டில் ரூ. 120 கோடியும் பழங்குடியினர் நலனுக்காக ரூ.75 கோடியும் ஒதுக்கப்படுகிறது. குழந்தைகள் தத்தெடுப்பு, அவர்களது பாதுகாப்பு சேவைகளுக்காக மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,391 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ.1,500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி செய்யும் மிஷன் சக்தி திட்டத்துக்கு ரூ. 3,150 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கற்பிப்போம், பெண் போலீஸ் தன்னார்வலர்கள், பெண்கள் ஹெல்ப்லைன் போன்றவற்றை உள்ளடக்கிய ‘சம்பல்’ திட்டத்துக்கு ரூ.629 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு முறையே ரூ.28 கோடியும் ரூ.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.2,618.38 கோடியும் மாநிலங்களுக்கு ரூ.22,195.95 கோடியும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.897.40 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்​சகத்​துக்கு: 2025-26-ம் நிதி​யண்​டுக்கான பட்ஜெட்​டில் உள்துறை அமைச்​சகத்​துக்கு ரூ.2,33,210.68 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதில், பெரும் பங்கு அதாவது ரூ.1,60,391.06 கோடி மத்திய காவல் படைகளான சிஆர்​பிஎப், பிஎஸ்​எப், சிஐஎஸ்எப் போன்ற​வற்றுக்கு வழங்​கப்பட உள்ளது. உள்நாட்டு பாது​காப்பு, எல்லைப் பாது​காப்பு போன்ற பணிகளை இந்த காவல் அமைப்பு​கள்​தான் மேற்​கொண்​டுள்ளன. கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் ரூ.2,19,643.31 கோடி மட்டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட நிலை​யி்ல் தற்போது அதைவிட கூடு​தலான தொகை உள்துறை அமைச்​சகத்​துக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

பயிற்சி, நிர்வாக சீர்திருத்தங்களுக்கு: அரசு அதிகாரி​களுக்கு பயிற்​சி​யளிப்பது மற்றும் நிர்வாக சீர்த்திருத்​தங்களை மேற்​கொள்​வதற்காக மத்திய பட்ஜெட்​டில் ரூ.434 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வரும் நிதி​யாண்டு முதல் உள்நாடு மற்றும் வெளி​நாடு​களில் பணியாற்றும் இந்திய அதிகாரி​களுக்கு உட்கட்​டமைப்பு தொடர்பான பயிற்சிகளை அளிக்க மத்திய பணியாளர் அமைச்​சகம் முடிவு செய்​துள்ளது. இதற்காக ரூ.334 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அதேபோல, நிர்வாக சீர்​திருத்​தங்களை செய்​வதற்​காக​வும் இந்த பட்ஜெட்​டில் ரூ.100 கோடி தனியாக ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

அணுமின் சக்தி திட்டங்களுக்கு: 2025-26-ம் நி​தி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் அணுமின் சக்தித் திட்​டங்​களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளு​மன்​றத்​தில் மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி​ய​தாவது: வரும் நிதி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் அணுமின் சக்தித் திட்​டங்​களுக்கு முன்னுரிமை கொடுத்​துள்ளோம். அணுமின்​சக்தி துறைக்கு ஊக்கம் தருவது முக்​கிய​மானது. நமது நாட்​டில் மின்​சாரம் தயாரிப்​ப​தற்கு அடிப்​படையாக நிலக்கரி உள்ளது. ஆனால், அதை மாற்றி அணுசக்தி மூலம் மின்​சாரம் தயாரிக்க முன்னுரிமையை மத்திய அரசு அளித்து வருகிறது.

வரும் நிதி​யாண்​டில் ரூ.20 ஆயிரம் கோடி அணுமின் சக்தி தயாரிப்​ப​தற்கு ஒதுக்​கப்​படும். 2047-ம் ஆண்டு​க்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்​சாரம் உற்பத்தி செய்​யப்​படும். இதற்காக தனியார் நிறு​வனங்​களு​ட​னும் ஒப்பந்தம் மேற்​கொள்​ளப்​படும். 2033- ம் ஆண்டுக்​குள் நமது நாட்​டில் 5 சிறிய ரக அணு உலைகள் (எஸ்​எம்​ஆர்) நிறு​வப்​படும். அணுமின்​சக்தி தயாரிக்க உதவும் 25 முக்கிய கனிமங்​களுக்கு முழு வரிவிலக்கு அளிக்​கப்​படும். இவை வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும்.

சிறைகளை நவீனமயமாக்க: சிறைகளை நவீனமயமாக்க ரூ.300 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை நவீனமயமாக்க பட்ஜெட்டில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இதே அளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. குற்ற நடவடிக்கைகளில் இருந்து சமூகத்தை காக்க மாதிரி சிறைகள் சட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் இறுதி செய்தது. கைதிகளுக்கு சட்ட உதவி, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதி, பாதுகாப்பு மேம்பாடு, நவீனமயமாக்கல், கைதிகளுக்கான தொழிற் பயிற்சி, அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான செலவினங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.300 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் அலுவலகத்துக்கு: குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் சம்பளம், இதர படிகள், ஜனாதிபதி மாளிகை ஊழியர்களுக்கான சம்பளம், நிர்வாக செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.141.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.60 லட்சம் குடியரசுத் தலைவரின் சம்பளம், படிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் குடியரசுத் தலைவர் சம்பளத்துக்காக இதே தொகை ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ.133.61 கோடியாகும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.8.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற கட்டமைப்பு: மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு, நகர்ப்புற சவால் நிதியம் என்ற பெயரில் ரூ.1 லட்சம் கோடியில் நிதியம் உருவாக்கப்படும். ‘வளர்ச்சி மையங்களாக நகரங்கள்', 'நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவளர்ச்சி' மற்றும் ‘நீர் மற்றும் சுகாதாரம்' ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த திட்டங்களுக்கான செலவில் 25 சதவீதம் வரை புதிய நிதியம் மூலம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவீத செலவு பத்திரங்கள், வங்கி கடன்கள் மற்றும் அரசு-தனியார் கூட்டாண்மை (பிபிபி) மூலம் நிதியளிக்கப்படும். வரும் 2025-26 நிதியாண்டுக்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். மலிவு மற்றும் நடுத்தர வருமான வீட்டுவசதிக்கான சிறப்பு சாளரத்தின் (SWAMIH) கீழ், 50,000 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 40,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும், இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக வாங்கிய கடன்களுக்கு ஈ.எம்.ஐ செலுத்தும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு மேலும் உதவும்.

ரயில்வே: ரயில்வே துறைக்கு கடந்​தாண்​டைப் போலவே 2025-26 நிதி​யாண்​டுக்​கும் ரூ.2.55 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. நாடு முழு​வதும் ரயில்வே விரிவாக்க திட்​டங்கள் பரவலாக்​கப்​பட்டு வரும் நிலை​யில் இந்த ஒதுக்​கீடு குறைவானது என்றும், அதன் வளர்ச்சி இலக்​குகளை சந்திப்​ப​தில் சவால்களை எதிர்​கொள்ள நேரிடும் என்றும் இத்துறையைச் சேர்ந்​தவரகள் கருத்து தெரி​வித்​துள்ளனர். கடந்த பட்ஜெட்​டில் ரயில்​வேக்கு ரூ.2,55,200 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. இது, அதற்கு முந்தைய 2023-24 நிதி​யாண்​டின் ஒதுக்​கீடான ரூ.2,40,200 கோடி​யுடன் ஒப்பிடும்​போது 5 சதவீதம் அதிக​மாகும்.
பாது​காப்பு மற்றும் மின்​மய​மாக்​கலில் ரயில்வே துறை அதிக கவனம் செலுத்தி வரும் நிலை​யில் இந்திய ரயில்​வேக்கான ஒதுக்​கீடு கடந்​தாண்​டைப் போலவே வரும் ஆண்டிலும் மாறாமல் ரூ.2.55 லட்சம் கோடி​யாகவே இருப்பது ​விமர்​சனத்தை ஏற்​படுத்​தி​உள்​ளது.

விளையாட்டு: வரும் நிதி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் விளை​யாட்டுத்​துறைக்கு ரூ.3,794 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. நாடாளு​மன்​றத்​தில் நேற்று தாக்​கலான பட்ஜெட்​டில் கூறப்​பட்​டுள்ள​தாவது: 2025-26-ம் நிதி​யாண்​டில் விளை​யாட்டுத்​துறைக்கு கூடு​தலாக ரூ.351.98 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. கேலோ இந்தியா திட்​டத்​துக்கு மட்டும் ரூ.1,000 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மொத்​தமாக விளை​யாட்டுத்​துறை வளர்ச்​சிக்காக ரூ.3,794.30 கோடி தரப்​பட்​டுள்​ளது. விரை​வில் ஆசிய விளை​யாட்டு, காமன்​வெல்த் விளை​யாட்டுப் போட்டி வரவுள்ள​தால் கூடு​தலாக விளை​யாட்டுத்​துறைக்கு ரூ.351 கோடி தரப்​பட்​டுள்​ளது.2036-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்​டியை நடத்து​வதற்கு இந்தியா விண்​ணப்​பித்​துள்ளது. அதற்கான உள்கட்​டமைப்பு வசதிகளை ஏற்படுத்​தும் பொருட்டு விளை​யாட்டுத்​துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்​கப்​பட்​டுள்ளதாக பட்ஜெட் உரை​யில் தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

கல்வித் துறை: மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் கல்வித்துறைக்கு ரூ.50,067 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.78,572 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்​வித்​துறை​யில் பல சீர்​திருத்​தங்கள் செய்​யப்​பட்​டுள்ளன. கல்வி​யில் செயற்கை நுண்​ணறிவை பயன்​படுத்து​வதற்காக புதிய சீர்​மிகு மையம் ரூ.500 கோடி​யில் அமைக்​கப்​பட​வுள்​ளது. ஐஐடிக்​களில் கட்டமைப்புகள் மேம்​படுத்​தப்​பட​வுள்ளன. 2014-ம் ஆண்டுக்​குப்​பின் 5 ஐஐடிக்களில் கட்டமைப்புகள் மேம்​படுத்​தப்​பட்​ட​தால், கூடு​தலாக 6,500 மாணவர்கள் படிக்​கும் வசதி ஏற்பட்​டுள்​ளது. ஐஐடி பாட்​னா​வில் தங்கும் விடுதி வசதி உட்பட அனைத்து கட்டமைப்பு வசதி​களும் மேம்​படுத்​தப்​பட்​டுள்ளன. கடந்த 10 ஆண்டு​களில் நாடு முழு​வதும் உள்ள 23 ஐஐடிக்​களில் கட்டமைப்பு வசதிகள் மேம்​படுத்​தப்​பட்ட மாணவர்​களின் எண்ணிக்கை 65,000-லிருந்து ரூ.1.35 லட்சமாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. ஐஐடிக்​களுக்கு மட்டும் ரூ.11,349 கோடி பட்ஜெட்​டில் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்​களில் பிராண்ட் பேண்ட் இணைப்பு வழங்​கப்​பட​வுள்​ளது. அரசு பள்ளி​களில் அடுத்த 5 ஆண்டு​களில் 50,000 அடல் டிங்​கரிங் கூடங்கள் உருவாக்​கப்​படும். திறன்​மேம்​பாட்டுக்கு 5 தேசிய திறன் மையங்கள் அமைக்​கப்​படும். பள்ளிகள் மற்றும் உயர்​கல்​வி​யில் இந்திய மொழி புத்​தகங்களை வழங்க பாரதிய பாஷா புஷ்தக் திட்​டத்தை மத்திய அரசு தொடங்​க​வுள்​ளது.

மூலதன செலவினங்​களுக்கு: 2025-26 நிதி​யாண்​டுக்கான பட்ஜெட்​டில் மூலதனசெல​வினங்​களுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. எனினும், நடப்பு நிதி ஆண்டில் நிர்​ண​யிக்​கப்​பட்ட மூலதன திட்​டங்​களுக்கான இலக்​குகள் எட்டப்​பட​வில்லை என்று பட்ஜெட்​டில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, முந்தைய பட்ஜெட் மதிப்​பீட்​டின்படி ரூ.11.11 லட்சம் கோடி மூலதன செலவினங்களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில் திருத்திய மதிப்​பீட்​டில் 10.18 லட்சம் கோடி மட்டுமே செலவாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அதன்​படி, மூலதன செலவின் இலக்​கில் ரூ.93,000 கோடி எட்டப்​பட​வில்லை என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி: சிபிஐ விசாரணை அமைப்​புக்கு பட்ஜெட்​டில் ரூ.1,071 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. சிபிஐ அமைப்பை பலப்​படுத்​த​வும் உட்கட்​டமைப்பை மேம்​படுத்​த​வும், சிபிஐக்கு ரூ.1,071 கோடி ரூபாய் பட்ஜெட்​டில் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட ரூ.84.12 கோடி அதிக​மாகும். அமைப்பு ரீதியான செலவினங்​கள், சிபிஐ​யின் பயிற்சி மையங்களை நவீனமய​மாக்​கல், நிலம் வாங்​குதல், அலுவல​கம், குடி​யிருப்பு கட்டிடங்கள் அமைத்தல் போன்ற வளர்ச்​சித் திட்​டங்​களுக்காக இந்தத் தொகை ஒதுக்​கப்​படு​வதாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

கடல்சார் மேம்பாட்டுக்கு: கடல்சார் தொழில் துறை​யின் நீண்ட கால நிதி​யுதவிக்காக ரூ.25,000 கோடி​யில் கடல்​சார் மேம்​பாட்டு நிதியம் அமைக்​கப்​படும் என்று நிதி​யமைச்சர் பட்ஜெட்​டில் தெரி​வித்​துள்ளார். இந்த மொத்த ஒதுக்​கீட்​டில் 49சதவீதம் அரசின் பங்களிப்பாக இருக்​கும். மீதமுள்ள தொகை துறை​முகங்கள் மற்றும் தனியார் துறையி​லிருந்து திரட்​டப்​படும். மேலும், கப்பல் தயாரிப்​பில் பயன்​படுத்​தப்​படும் பாகங்கள் மற்றும் உள்ளீடுகள் மீதான சுங்க வரி விலக்கு மேலும் 10 ஆண்டு​களுக்கு நீட்​டிக்​கப்​படு​கிறது. இதன் மூலம், உள்நாட்டு கப்பல் கட்டு​மானத்தை ஊக்கு​வித்து சர்வதேச வர்த்​தகத்தை அதிகரிக்க வேண்​டும் என்ற மத்திய அரசின் இலக்​கிற்கு இந்த திட்டம் மிக முக்​கிய​மான​தாகும் என்று நி​தி​யமைச்​சர் தெரி​வித்​துள்ளார்​.

சமூக நீதி துறை: மத்திய பட்ஜெட்டில் சமூக நீதித் துறைக்கு ரூ.13,611 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பட்டியலின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகைக்கு ரூ.212 கோடி, ஓபிசி, பட்டியலின மாணவர்களின் இலவச சிறப்பு பயிற்சிக்கு ரூ.20 கோடி, பட்டியலின மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.110 கோடி, பட்டியலின மாணவர்களின் வெளிநாட்டு கல்வி உதவித் தொகைக்கு ரூ.130 கோடி, ஓபிசி மற்றும் இபிசி பிரிவு மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.ஓபிசி மற்றும் இபிசி மாணவர்களின் உயர் கல்வி சார்ந்த பிஎம் யாசவி திட்டத்துக்கு ரூ.2,190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பட்ஜெட்டில் ரூ.1,275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x