Published : 24 Jul 2018 08:29 AM
Last Updated : 24 Jul 2018 08:29 AM
திருப்பதி ஏழுமலையான் கோயி லில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் வரும் ஆகஸ்ட் 12 முதல் 16-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் 11-ம் தேதி அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால், 10-ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனு மதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு 17-ம் தேதி காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்தது. இதற்கு பக்தர்கள், பல்வேறு பீடாதிபதிகள், மடாதிபதிகள், இந்து அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 1994, 2006-ல் நடைபெற்ற சம்ப்ரோக் ஷணத்தின் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டது போல, இம்முறையும் குறைந்த அளவிலா வது பக்தர்களை அனுமதிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். தரிசனத் துக்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், அறங்காவலர் குழு கூட்டம் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் இன்று காலையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரி கிறது. எனவே, சம்ப்ரோக் ஷணத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இல் லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT