Published : 31 Jan 2025 03:39 AM
Last Updated : 31 Jan 2025 03:39 AM

மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த 30 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. இங்கு மவுனி அமாவாசை (தை அமாவாசை) நாளான கடந்த 29-ம் தேதி கூட்ட நெரிசல் ஏற்பட்டு30 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் பிரயாக்ராஜில் தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங், டிஜிபி பிரசாந்த் குமார் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர்.

கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஹர்ஷ் குமார் தலைமையில் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் காவல் துறை அதிகாரி வி.கே.குப்தா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டி.கே.சிங்இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இன்று பிரயாக்ராஜ் சென்று விசாரணையை தொடங்குகின்றனர்.

இதற்கிடையே, பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்டமாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அதிகாலை காணொலி வாயிலாகமுக்கிய ஆலோசனை நடத்தினார். அவரது உத்தரவின்பேரில், கும்பமேளா பகுதிமுழுவதும் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விஐபி பாஸ் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராட செல்வதற்கு ஒரு பாதையும், புனித நீராடிவிட்டு வெளியேற தனி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ரயில், பேருந்துகளில் பாதுகாப்பாக சொந்தஊருக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கும்பமேளாவில் செக்டார்-22 பகுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு, 15 கூடாரங்கள் நாசமாகின. உடனே அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் இல்லை. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x