Published : 30 Jan 2025 02:16 AM
Last Updated : 30 Jan 2025 02:16 AM
சவுதி அரேபியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததாக ஜெட்டாவில் இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது.
சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தங்கள் ஆதரவை அளிப்பதாகவும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஜிசான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். சவுதி அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. மேலும் முழு ஆதரவு அளித்து வருகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். தகவல் அளிப்பதற்கு தனி ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சவுதி விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' பதிவில், “இந்த விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த துயரமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதற்காக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment