Last Updated : 07 Jul, 2018 12:30 PM

 

Published : 07 Jul 2018 12:30 PM
Last Updated : 07 Jul 2018 12:30 PM

ரயிலில் கடத்தப்பட்ட சிறார் சீர்த்திருத்தப் பள்ளி சிறுமிகள்: காப்பாற்றிய சக பயணியின் ட்வீட்

சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து ரயிலில் கடத்தப்பட்ட சிறுமிகள், ரயில் பயணியின் ட்வீட்டர் பதிவினால் காப்பாற்றப்பட்ட சம்பவம் கோரக்பூர் அருகே நடந்துள்ளது.

ஆதர்ஷ் ஸ்ரீவத்சவா என்பவர் நேற்று முன்தினம் இரவு முசாபர் நகர் -பந்த்ரா அவந்த் எக்ஸ்பிரஸில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது பெட்டியிலேயே அவருடன் 25 சிறுமிகளும் உடன் பயணித்தனர். அப்போது இந்த ரயில் பயணி தன்னுடன் பயணிக்கும் இந்த 25 பெண்களும் அழுவதும் மாட்டிக்கொண்ட உணர்வோடு தவிப்பதும் தெரியவந்தது.

அச்சிறுமிகள் அனைவரும் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டித்தவிப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனே தனது செல்போனை எடுத்து அப் பெண்களின் அப்போதையை நிலையை ட்வீட்டரில் பதிவு செய்தார்.

இப்பயணி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சருமான மனோஜ் சின்ஹாவுக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் ட்வீட் செய்தார்.

அவரது ட்வீட்டை  தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே வாரணாசி மற்றும் லக்னோ ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அவர்கள் ரயில்வே பாதுகாப்புப் படையினரோடு இணைந்து அப்பெண்களை மீட்டனர்.

இம் மீட்புப் பணியில் கோரக்பூரைச் சேர்ந்த அரசு ரயில்வே போலீஸார், கடத்தல் தடுப்பு போலீஸ் பிரிவுடன் சைல்டுலைன் அமைப்பும் இணைந்து செயல்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சில ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள், சாதாரண உடைகளோடு ரயிலில் நுழைந்தனர். அவர்கள் கப்தான் கஞ்ச்சிலிருந்து கோரக்பூர் வரை சிறுமிகள் பயணித்த பெட்டியிலேயே அவர்களுக்குடன் பாதுகாப்பாக வந்து மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து கடத்தப்பட்டவர்கள் ஆவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x