Published : 28 Jan 2025 02:33 AM
Last Updated : 28 Jan 2025 02:33 AM
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில், குய்லின்-பார் சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) என்ற நரம்பியல் கோளாறு நோய் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இந்த நோய், மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைத் தாக்கி வருகிறது.
இந்த மர்ம நோயால் இதுவரை புனேவில் 101 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் புனேவில் நேற்று உயிரிழந்தார். இதன்மூலம் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டு முதல் மரணம் பதிவாகி உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் கிர்கித்வாடி, டி.எஸ்.கே. விஷ்வா, நான்டெட்ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நோய்க்கு இதுவரை தடுப்பூசி இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு. அறிகுறிகள் வந்த உடன் நரம்பியல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவர்களை அணுகுமாறு மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment