Last Updated : 16 Jan, 2025 04:17 AM

 

Published : 16 Jan 2025 04:17 AM
Last Updated : 16 Jan 2025 04:17 AM

இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு

பெங்களூரு: இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார்.

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (இஸ்ரோ) தலைவராக இருந்த விஞ்​ஞானி எஸ்.சோம்​நாத் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய தலைவராக விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார். அவருக்கு சோம்​நாத் உள்ளிட்ட விஞ்​ஞானிகள் பூங்​கொத்து கொடுத்து வாழ்த்து தெரி​வித்​தனர்.

விஞ்​ஞானி நாராயணன் அடுத்த 2 ஆண்டுகள் இந்த பதவி​யில் நீடிப்​பார். இவரது வழிகாட்டு​தலின்படி இஸ்ரோ​வின் புதிய விண்​வெளித்​திட்​டங்​கள், ககன்​யான் மனித விண்​வெளிப் பயணம், விண்​வெளி​யில் மிதக்​கும் ஆராய்ச்சி மையம் அமைப்​பது, இந்தியா​வின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்கள் உருவாக்கம் போன்ற திட்​டங்கள் நடைபெறும்என இஸ்ரோ தெரி​வித்​துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x