Last Updated : 14 Jan, 2025 06:39 AM

 

Published : 14 Jan 2025 06:39 AM
Last Updated : 14 Jan 2025 06:39 AM

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய‌ தீபாவின் மனு தள்ளுபடி

பெங்களூரு: தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசா​ரணை​யின்​போது அவரது வீட்​டில் இருந்து கைப்​பற்​றப்​பட்ட தங்க, வைர நகைகள், வெள்​ளிப் பொருட்கள் கர்நாடக அரசின் கருவூலத்​தில் வைக்​கப்​பட்​டுள்ளன. இந்த நகைகளை கர்நாடக மாநிலம், தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்​டும் என கடந்த ஆண்டு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்றம் உத்தரவிட்​டது.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து ஜெயலலி​தா​வின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் கர்நாடக உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர். இவ்வழக்​கின் விசா​ரணை​யின்​போது ஜெ.தீபா தரப்​பில், தான் ஜெயலலி​தா​வின் சட்டப்​பூர்​வமான வாரிசு என வாதிடப்​பட்​டது. இதற்கு கர்நாடக அரசு தரப்​பில் எதிர்ப்பு தெரிவிக்​கப்​பட்​டது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட கர்நாடக உயர் நீதி​மன்ற நீதிபதி வி.ஷனந்தா நேற்று தீர்ப்பு வழங்​கினார். அப்போது, “சட்​டப்​பூர்​வ வாரிசாக இருப்​ப​தாலேயே ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோ​ருக்கு இந்த நகைகளை வழங்க முடி​யாது. இவ்வழக்​கில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​ற​மும் உச்ச நீதி​மன்​ற​மும் சொத்துகள் அனைத்​தை​யும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்​டும் என குறிப்​பிட்​டுள்​ளன” எனக்​கூறி, அவர்​களின் மனுவை தள்ளுபடி செய்​தார்.

மேலும் நீதிபதி தனது தீர்ப்​பில், “உலகின் பல திசைகளுக்கு சென்று நாடுகளை கைப்​பற்றிய மாவீரன் அலெக்​சாண்டர் இறந்த​போது கல்லறைக்கு வெறுங்​கை​யுடன் சென்​றார். நம்மால் இறந்த பிறகு இங்கிருந்து எதையும் எடுத்​துச் செல்ல முடி​யாது. எனவே, உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்கு கொடுத்து உதவி செய்​யுங்​கள். ஜெயலலிதா பேரில் அறக்​கட்டளை உருவாக்கி, அவர் மூலம் கிடைத்த‌ பணத்தை இல்லாதவர்​களுக்கு கொடுங்​கள். அவ்வாறு செய்​தால் உங்​களுக்கு மன நிம்​மதி கிடைப்​பதுடன், இறந்த ஆன்​மா​வும் நிச்​சய​மாக சாந்​தி​யடை​யும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x