Published : 09 Jan 2025 02:05 AM
Last Updated : 09 Jan 2025 02:05 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மாதம் நக்சலைட் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் விக்ரம் கவுடா போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இதையடுத்து நக்சல் ஒழிப்புபடை அதிகாரிகள் அமைதிக்கான மக்கள் மன்றத்தின் உறுப்பினர் லலிதா நாயக் மூலம் தலைமறைவாக உள்ள நக்ச
லைட்டு அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 6 பேர் சரணடைய விருப்பம் தெரிவித்தனர்.
அதன்படி 6 பேரும் நேற்று மாலை முதல்வர் சித்தராமையா முன்னிலையில் அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் சரண் அடைந்தனர். அப்போது அவர்களுக்கு அரசமைப்பு சட்ட புத்தகத்தையும், ரோஜா மலர்களையும் வழங்கி சித்தராமையா வரவேற்றார். பின்னர் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘‘தமிழகத்தைச் சேர்ந்த வசந்தா உட்பட 6 நக்சலைட்டுகள் இப்போது சரண் அடைந்துள்ளனர். அமைதி வழிக்கு திரும்ப விரும்பும் அனைவரையும் சட்டப்படி
மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எனது அரசு வழிவகை செய்யும்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT